ஓடுகிறது. சுழியில் அகப்பட்டுச் சுழல்கிறது. சில சமயம் கற்பவை கற்றபின்... கரையோடு ஒதுங்குகிறது.
மீண்டும் ஓடுகிறது. ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த சொரிமுத்து ஆற்றில் கிளையைப் போட்டாற்போல் வாழ்ந்திருக்க வேண்டியவர்தான். ஆனால் அவரோ இயற்கையின் விதிகளை மறுத்து எதிர்நீச்சல் போ டத் துணிந்தார். அவரை அறிஞர் என்கிறோம்; கற்றுக்கொடுக்க யாருமில்லை.
பழந்தமிழ் இலக்கியத்தை யாரும் அவர் காதில் ஓதவில்லை. சொரிமுத்துவுக்கும் தலைவர் ஜீவாவுக்குமுள்ள இடைவெளி கொஞ்சம் தூரமல்ல. அதையொரு கணம் எண்ணிப் பார்த்தால், அவருடைய சாதனை தெரியவரும். ‘என் வாழ்வு என் கைகளில்’ என்று நம்பியவர் அவர்.
அவருடைய வாழ்க்கையை ஆராய்ந்து பார்க்கிறபோ து அவருடைய நம்பிக்கை பலித்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். கடவுளின் ‘முன்னேற்பாடுகளை’ முடிந்த மட்டும் அவர் தகர்த்து எறிந்துவிட்டார். நீரில் விழுந்த கிளை மலைக்குச் சென்றுவிட்டது. எனினும், மரணம் இன்னும் கடவுளுக்குத்தான் சொந்தம்.
பேரோசை காற்றில் கலந்துவிட்டது. ஜீவா என்றழைக்கப்படும் ப. ஜீவானந்தம் தொடக்கத்தில் காந்தியவாதியாகவும் பிறகு சுயமரியாதை இயக்கப் போராளியாகவும் பொதுவுடைமை இயக்கத் தலைவராகவும் செயல்பட்டார்; சிறந்த தமிழ்ப் பற்றாள ர்; எளிமையின் அடையாளமாகத் திகழ்ந்தவர். நாகர்கோவிலைச் சேர்ந்த சுந்தர ராமசாமி, நவீனத் தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவர்.
பசுவய்யா என்ற புனைபெயரில் கவிதைகள் எழுதியவர். ரத்னாபாயின் ஆங்கிலம், காகங்கள் உள்ளிட்ட சிறுகதைகளை எழுதியிருப்பதுடன் ஒரு புளியமரத்தின் கதை, ஜே.ஜே. சில குறிப்புகள், குழந்தைகள் பெண்கள் ஆண்கள் ஆகிய புதினங்களையும் எழுதியுள்ளார். செம்மீன், தோட்டியின் மகன் ஆகிய புதினங்களை மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார்.
பாடப்பகுதியாக உள்ள இக்கட்டுரை 1963இல் தாமரை இதழின் ஜீவா பற்றிய சிறப்புமலரில் வெளியானது. நூல்வெளி . நான் விரும்பும் நாட்டிற்குழைத்த தலைவ ர் – மேடைப்பேச்சுக்கான கவியுரை உருவாக்குக. .
ஜீவானந்தம் பற்றிய செய்திகளைத் திரட்டி வகுப்பறையில் படித்துக் காட்டுக. (’காற்றில் கலந்த பேரKோசை’ கட்டுரையின் சுருக்கப்பட்ட வடிவம்) XI Std Tamil முன்கதைச் சுருக்கம் அரசன் ஒருவன் தன் மகள் அமுதவல்லிக்குக் கவிதை எழுதும் கலையினைப் பயிற்றுவிக்க விரும்புகிறான். அதற்காக அமைச்சரிடம் கருத்துரை கேட்கிறான். அமைச்சர் உதாரன் பெயரை முன்மொழிந்து, ‘அவன் அழகும் அறிவும் இளமையும் வாய்ந்தவன்’ என்று கூறுகிறார்.
தன் மகள் எளிய கவிஞரோடு காதல் வயப்படுவாளோ என எண்ணி அரசன் தயங்குகிறான். அதற்கு அமைச்சர் ஓர் உத்தியைக் கூறுகிறார். அதன்படி உதாரன் பார்வையற்றவன் என்று அமுதவல்லியிடம் கூறுகின்றனர். இதுபோலவே உதாரனிடம் அமுதவல்லி தொழுநோயாளி என்று தெரிவிக்கின்றனர்.
இருவருக்கும் இடையில் திரையிடப்படுகிறது. உதாரன், அமுதவல்லிக்குக் கவிதை எழுதும் கலையைக் கற்றுத் தருகிறான். ஓர் இரவுப்பொ ழுதில் அழகிய நிலவினைக் கண்டு உதாரன் தன்னை மறந்து கவிதை ஒன்றைப் பாடுகிறான். பார்வையற்ற ஒருவன் நிலவின் அழகைக் கண்டு எவ்வாறு கவிபாட முடியும் என்று ஐயம் கொண்ட அமுதவல்லி திரையினை விலக்கினாள்.
அழகிய ஆண் மகன் இருக்கக் கண்டு அவனை விரும்பத் தொடங்குகிறாள். உதாரனும் மக்களாட்சிக்கு முன்புவரை சட்டம், நிருவாகம், நீதி ஆகியவை அரசனிடமே குவிந்து இருந்தன. இந்நிலை சிறிது சிறிதாக மக்கள் புரட்சியால் மாற்றப்பட்டுத் தற்பொழுது மக்களாட்சிமுறை பல்வேறு நாடுகளில் மலர்ந்துள்ளது. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியன மக்களாட்சியின் அடிப்படைக்கூறுகள்.
மக்களாட்சிச் சிந்தனைகளைப் பரப்பியதில் இலக்கியத்திற்கும் பெரும்பங்கு உண்டு. அரசு என்பது மக்களுக்கானதே என்று காலந்தோறும் இலக்கிய வடிவங்களின் மூலம் கவிஞர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அழகான அமுதவல்லியைக் கண்டு விருப்பம் கொள்கிறான். இருவருக்கும் இடையே அன்பு மலர்கிறது.