📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Tamil · Page 74question

காவடிச்சிந்து

Chapter 2: Front Matter · Tamil

காவடிச்சிந்து XI Std Tamil ச@ொல்லும் பொருளும் புயம் - தோள்; வரை - மலை; வன்னம் - அழகு; கழுகாசலம் - கழுகு மலை; துஜஸ் தம்பம் - கொடி மரம்; சலராசி - கடலில் வாழும் மீன் முதலிய உயிர்கள்; விலாசம் - அழகு; நூபுரம் - சிலம்பு; மாசுணம் - பாம்பு; இஞ்சி - மதில்; புயல் - மேகம்; கறங்கும் - சுழலும். பாடலின் பொருள் சென்னிகுளம் என்னும் நகரில் வாழ்கின்ற அண்ணாமலைதாசன் ஆகிய நான் பாடிய உலகம் போற்றும் காவடிச்சிந்து என்னும் மதுரமான கவிமாலையைத் தன் மலைபோன்ற அகன்ற தோளில் சார்த்திக்கொள்கிறான் முருகன். அந்தக் கழுகுமலைத் தலைவன் முருகனின் கோவில் வளத்தை நான் சொல்கிறேன். கோவில் கோபுரத்தின் தங்கக் கலசம் தேவர் உலகை விட உயர்ந்து ஒளி வீசுகிறது.

அவ்வொளி உலகங கள் பல வற்றிலும் கண்கள் கூசும்படி பரவுகிறது. பெண்ணே! கடலில் வாழும் மீன், மகரம் போன்ற உருவ அமைப்புகள் கொண்ட கொடிகள் எல்லாம் சிறக்க, முருகன் கோவில் திகழ்கிறது. காவடி எடுக்கும் அடியார்கள் பாடும் திருப்புகழ் முழக்கமானது, அமராவதிப் பட்டினத்தில் உள்ள தேவர்களின் செவியைச் சென்று அடைக்கிறது.

கழுகுமலை நகரின் கோட்டை உயரமானது. அதில் மேகங கள் படிகின்றன. அவற்றிலிருந்து உருவாகும் மின்னல்கள் இருளைக் கிழிக்கின்றன. தமது நெஞ்சம் நெகிழ்ந்துருக, தங்கத்தினும் மேலான காவடியைத் தோளில் தூக்கிக் கனலில் உருகிய மெழுகென முருகனை நோக்கி வரும் பக்தர்கள் அருளைப் பெறுவார்; இன்பம் அடைவார்.

இலக்கணக்குறிப்பு தாவி - வினையெச்சம், மாதே - விளி பகுபத உறுப்பிலக்கணம் வருகின்ற - வா (வரு) + கின்று + அ வா - பகுதி, வரு எனத் திரிந்தது விகாரம் கின்று - நிகழ்கால இடைநிலை அ - பெயரெச்ச விகுதி புணர்ச்சி விதி திருப்புகழ் - திரு + புகழ் இயல்பினும் விதியினும் நின்ற உயிர் முன் கசதப மிகும். திருப்புகழ் உயர்ந்தோங்கும் - உயர்ந்து + ஓங்கும் உயிர்வரின் உக்குறள் மெய் விட்டோடும் உயர்ந்த் + ஓங்கும். உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே உயர்ந்தோங்கும். 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சென்னிகுளம் அண்ணாமலையார் பாடிய காவடிச்சிந்து அருணகிரியாரின் திருப்புகழ்த் தாக்கத்தால் விளைந்த சிறந்த சந்த இலக்கியமாகும்.

இப்பாடலின் மெட்டு அண்ணாமலையாராலேயே அமைக்கப்பட்டதாகும். தமிழில் முதன்முதலில் வண்ணச்சிந்து பாடியதால், காவடிச் சிந்தின் தந்தை என அழைக்கப்பட்டார்; வயதிலேயே ஊற்றுமலைக்குச் சென்று அங்குக் குறுநிலத்தலைவராக இருந்த இருதயாலய மருதப்பத் தேவரின் அரசவைப் புலவராகவும் இருந்தார். இவர், இந்நூல் தவிர வீரைத் தலபுராணம், வீரை நவநீத கிருஷ்ணசாமி பதிகம், சங்கரன்கோவில் திரிபந்தாதி, கருவை மும்மணிக்கோவை , கோமதி அந்தாதி ஆகிய நூல்களையும் இயற்றியுள்ளார். நூல்வெளி கற்பவை கற்றபின்...

. எந்தெந்த நாடுகளில் காவடி ஆட்டம் இன்றளவும் நிகழ்த்தப்படுகிறது? அதற்கான காரணங்களைத் திரட்டி, கலந்துரையாடல் நிகழ்த்துக. .

நீங்கள் விரும்பும் தலைப்பில் எதுகை, மோனை, சந்தநயம் கொண்ட பாடல் ஒன்றை எழுதி, காட்சிப்படுத்துக. XI Std Tamil அன்பும் அறனும் விளையும் திருமண வாழ்வைத் தலைவி விரும்புவதையும் இரு மனம் இணையும் திருமணத்தை உறுதிசெய்ய இரு வீட்டார் முனைவதையும் அகத்திணை இலக்கணத்தின் இலக்கியமாய் விளங்கும் குறுந்தொகை இப்பாடல்வழிக் காட்சிப்படுத்துகிறது. அம்ம வாழி தோழி நம்மூர்ப் பிரிந்தோர்ப் புணர்ப்போர் இருந்தனர் கொல்லோ தண்டுடைக் கையர் வெண்டலைச் சிதவலர் நன்றுநன் றென்னும் மாக்களோடு இன்றுபெரிது என்னும் ஆங்கண தவையே. * ( ) - வெள்ளிவீதியார் திணை: குறிஞ்சித்திணை துறை: தலைவன் சான் றோரைத் தலைவியின் தமர்பால் மணம் பேசி வர விடுப்ப, தன் தமர் மறுப்பாரோ என்று அஞ்சிய தலைவியை நோக்கி, “தலைவன் வரைவை நமர் ஏற்றுக்கொ ண்டனர்; நீ கவலை ஒழிவாயாக” என்று தோழி கூறியது.

துறை விளக்கம்: தலைவன் தலைவியை மணம் முடிப்பது பற்றிப் பேச , சான்றோரை அனுப்புகிறான். தலைவி, அப்போது எங்கே தன் பெற் றோர் மணம் பேச மறுத்துவிடுவார்களோ என்று கல ங்குகிறாள். இந்நிலையில் தோழி அவளிடம் தலைவனின் தEோழி, நீ வாழி! நானறிய ஒன்று ச@ொல்.

(உன் இதயம் உள்ளவன் தான்முயன்று தேடி) இன்று க>ொடுத்த ஈடிலாப் பரிசம் நன்று நன்றென நம்மூர்ப் பொது அவையில் ச@ொன்ன முதுபெரும் சான்றோர்போல் பிரிந்தோரைச் சேர்ப்போர் இருந்தாரோ அன்றும்.

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →