பெற்றவர். தற்போது ஒடிசா மாநிலத்தில் கூடுதல் தலைமைச் செயலர் மற்றும் அம்மாநிலத்தின் வளர்ச்சி ஆணையராகப் பொறுப்பில் இருக்கிறார். பாடப்பகுதி ‘சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்’ என்னும் இவரது நூலிலிருந்து எடுக்கப்பட்டது. நூல்வெளி கற்பவை கற்றபின்...
பெய ர்களோடு பொ ருந்திப் போ கும் சான்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. இச்சான்றுகள், அப்பகுதிகளில் திராவிடர்கள் வாழ்ந்ததற்கா ன அடையாளங்களை உறுதி செய்வதோடு மலை இடப்பெயர் ஆய்வுகளின் இன்றைய வளர்ச்சிப்போக்கினை வெளிப்படுத்துவனவாகவும் அமைந்துள்ளன. . உங்கள் ஊரின் அருகிலுள்ள, உங்களுக்குத் தெரிந்த மலைகளின் பெயர்க் காரணத்தை அறிந்து வகுப்பில் பகிர்ந்துகொள க.
. மலை குறித்த வேறு சொற்களையும் சார்ந்த கலைச்சொற்களையும் திரட்டிப் பட்டியல் உருவாக்குக. XI Std Tamil காவடி தமிழ்ப் பண்பாட்டுக்கூறுகளுள் ஒன்று. உலகெங்கும் வாழும் தமிழர்கள் குன்றுதோறும் வீற்றிருக்கும் முருகன் கோவில்களில் காவடி எடுத்து ஆடுவது வழக்கமாக உள்ளது.
காவடி தூக்கிச் செல்வோர், அதைச் சுமையாக எண்ணாமல் பாடியவாறே செல்வதற்கு வழிநடைப் பாடல்களை இயற்றியுள்ளனர். கோயில் வளம் சென்னி குளநகர் வாசன் - தமிழ் தேறும் அண்ணாமலை தாசன் - செப்பும் செகமெச்சிய மதுரக்கவி யதனைப்புய வரையிற்புனை தீரன்; அயில் வீரன். வன்ன மயில்முரு கேசன் - குற வள்ளி பதம்பணி நேசன் - உரை வரமேதரு கழுகாசல பதிகோயிலின் வளம்நான்மற வாதே சொல்வன் மாதே! கோபுரத் துத்தங்கத் தூவி - தேவர் கோபுரத் துக்கப்பால் மேவி - கண்கள் கூசப்பிர காசத்தொளி மாசற்று விலாசத்தொடு குலவும் புவி பலவும்.
நூபுரத் துத்தொனி வெடிக்கும் - பத நுண்ணிடை மாதர்கள் நடிக்கும் - அங்கே நுழைவாரிடு முழவோசைகள் திசைமாசுணம் இடியோ என நோக்கும் படி தாக்கும். சந்நிதி யில்துஜஸ் தம்பம் - விண்ணில் தாவி வருகின்ற கும்பம் - எனும் சலராசியை வடிவார்பல கொடிசூடிய முடிமீதிலே தாங்கும்; உயர்ந் தோங்கும். உன்னத மாகிய இஞ்சி-பொன்னாட்டு உம்பர் நகருக்கு மிஞ்சி - மிக உயர்வானது பெறலால் அதில் அதிசீதள புயல்சாலவும் உறங்கும்; மின்னிக் கறங்கும். அருணகிரி நாவில் பழக்கம் - தரும் அந்தத் திருப்புகழ் முழக்கம் -பல அடியார்கணம் மொழிபோதினில் அமராவதி இமையோர்செவி அடைக்கும்; அண்டம் உடைக்கும்.
கருணை முருகனைப் போற்றித்-தங்கக் காவடி தோளின்மேல் ஏற்றிக் - கொழும் கனல்ஏறிய மெழுகாய்வரு பவர்ஏவரும் இகமேகதி காண்பார்; இன்பம் பூண்பார். -சென்னிகுளம் அண்ணாமலையார். காவடிச் சிந்து தமிழ்நாட்டில் பண்டைக்காலம் முதல் நாட்டார் வழக்கிலுள்ள இசைமரபே காவடிச் சிந்து எனலாம். முருகப் பெருமானின் வழிபாட்டிற்காகப் பால் முதலான வழிபாட்டுப் பொ ருட்களைக் கொண்டு செல்வோர், ஆடல் பாடல்களுடன் ஆலயங்களை நோக்கிச் செல்வர்.
அவர்களின் வழிநடைப்பாடல் வகைகளிலிருந்து காவடிச் சிந்து எனும் பாவடிவம் தோன்றியது.