பவணந்தி முனிவர் . மாடங்களுக்கு ஓவியங்களும் பெரிய நகரங்களுக்குக் கோபுரங்களும் அழகிய தோள்கள க்கொண ட மகளிருக்கு அணிகலன்களும் எழிலைத் தரும். அவை போன் று எல்லாவகை நூல்களுக்கும் முன்னர் அழகு தருவதற்காக அணிந்துரையைப் புலவர்கள் பெருமையுடன் சேர்த்து வைத்தனர். புணர்ச்சிவிதி அணிந்துரை - அணிந்து + உரை உயிர்வரின் உக்குறள் மெய் விட்டோடும் - அணிந்த் + உரை உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே - அணிந்துரை.
பொதுச்சிறப்பு - பொது + சிறப்பு இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும் - பொதுச்சிறப்பு. XI Std Tamil நாங்க ள் அப்போ து இலங்கையில் மவுண்லவினியா என்னும் இடத்தில் வாடகை வீட்டில் தங்கியிருந்தோம். எங்கள் வீட்டுச் சொந்தக்காரர் பெயர் பிரீஸ். அவருக்குத் தமிழ் தெரியாது.
எனக்குச் சிங்களம் தெரியாது. ஆம் ஆண்டு மே மாத ம் ஓர் இரவு கலவரம் மெல்ல மெல்ல ஊர்ந்து கொழும்புக்கு வந்தது. எந்த நேரமும் எங்கள் வீடு தாக்குதலுக்கு உள்ளாகலாம் என்று உணர்ந்த எங்கள் அண்ணா எங்கள் உயிரையும் உடைமை களையும் பிரீஸ்தான் பா துகாக்க வேண்டும் என்று அவரிடம் வேண்டினார். பிரீஸ் அப்போதுதான் தன் நினைவுக்கு வந்ததுபோல் ஒரு புதுமனிதராக மாறினார்.
எங்கள் பாதுகாப்புக்கு, தான் உத்திரவாத ம் என்றார். ஒரு நாற்காலியை எடுத்து வீட்டுக்கு வெளியே போட் டு அன்றிரவு முழுக்க அங்கேயே தங்கினார். தூங்கவே இல்லை. உள்ளே நாங்க ளும் தூங்காமல் விடிவதற்காகக் காத்திருந்தோம்.
அடுத்த நாள் கால அங்கிருந்த மூன்று தமிழ்க் குடும்பங்களில் ஒரு குடும்பத்தின் வீடு உடைந்து சிதிலமாகிவிட்டது என்றார்கள். ஒரு குடும்பத்து ஆட்கள் இரவோடு இரவாக மறைந்துவிட்டார்க ள். எஞ்சியது நாங்க ள் மட்டும்தான். எனக்குக் கிடைத்த சட்டை ஒரு போலீஸ் வாகனத்தில் எங்களையும் இன்னும் சில தமிழ்க் குடும்பங்களையும் அகதிகள் முகாமுக்கு அழைத்துச் சென்றார்கள்.
ஒரேயொரு பெட்டிதான் எடுத்து வரலாம் என்று கட்டளை. என் பங்குக்கு டேனியல் டிஃபோ எழுதிய ”ராபின்சன் குரூசோ” என்ற ஒரேயொரு புத்தகத்தைக் கையில் எடுத்துக்கொண்டேன் . எப்போது வீட்டுக்குத் திரும்பி வருவோம் என்பது நிச்சயமில்லை. அடுத்த வேளை உணவு எப்போ து, எங்கேயிருந்து வரும் என்பதும் தெரியாது.
முகாமில் ஒரு தொண்டு நிறுவனம் அகதிகளுக்கு இலவசமாக உடைகள் வழங்கியது. ஏதோவொரு வெளிநாட்டில் யாரோ போட் டு வைத்த உடைகள்தாம் அவை. அதற்காக ஆட்கள் சண்டை போட் டு ஒருவர் மேல் இன்னொருவர் ஏறி நின்று பெற்றுக்கொண்டார்க ள். எனக்குப் பெரிசான இரவு ஆடையின் மேல்சட்டை மட்டுமே அகப்பட்டது.
கீழ்க் கால்சட்டை யாருக்குப் போனதோ தெரியாது. அந்த மேல்சட்டையின் கடைசிப் பட்டன் என் கைகளுக்கு எட்டாது. ஆனால் மிகச் சந்தோஷமாக அதை நான் பகலிலும் இரவிலும் அணிந்துகொண்டேன் . காலந்தோ றும் நிலையான வாழ்விடங்களைத் தேடிப் புலம்பெயர்ந்தபடியே இருந்த நாடோடி இனம், நிலவுடைமைச் சமூகமாக மாறப் பல்லாயிரம் ஆண்டுகள் ஆயின.
மண்ணிலிருந்து பயிர்களைப் பிடுங்கியெறிவதுபோல, தாய்மண்ணிலிருந்து மனிதவுயிர்களைப் பெயர்த்து எறியும் போக்கு காலந்தோறும் நடந்துவரும் பேரவலமாகும். தங்களுடைய தாய்நாட்டிலிருந்து வெளியேறியவர்களும் வெளியேற்றப் பட்டவர்களும் எதிர்கொள்ளும் அவலங்களை ஆறாம்திணை ஆறாத வடுவாகப் பதிவு செய்கிறது.