📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Tamil · Page 114question

இதழாளர் பாரதி · Part 2

Chapter 2: Front Matter · Tamil

கொள்வ திலேயே கவனமாக இருந்துவிட்டேன். அம்மாவும் தம்பியும் நலம்தானே? என் நினைவு முழுவதும் நம் வயல்வெளியும் கன்றுக்குட்டியும்தாம். உங்களுக்கு என் அன்பும் வணக்கமும் அப்பா.

தங்கள் அன்பு மகள், வானதி. . . , அன்பு மகள் வானதிக்கு, உன் மின்னஞ்சல் கிடைக்கப்பெற்றேன்.

பெருமகிழ்வு கொண்டேன். நீயும் உன் நண்பர்களும் நலமாக உள்ளீர்களா? எவ்வளவு கடுமையான வேலைகள் இருப்பினும் காலை உணவைத் தவிர்க்காதே. இங்கு அம்மா, தம்பி, வயல்வெளி, உன் கன்றுக்குட்டி எல் லோரும் நலமே.

பாரதி பற்றி அறிந்திருந்த செய்திகள நீ பகிர்ந்திருந்தது மகிழ்ச்சி. நூல்கள வாசிப்பதை இன்றைய இளைய சமுதாயம் மறந்துபோ னதோ என்றெண்ணிக் கவலை கொண்டிருந்தேன். உன் மின்னஞ்சலால் என் பெருங்கவலை தீர்ந்தது. பாரதி இந்தியா இதழை ஏன் சிவப்பு வண்ணத்தாளில் வெளியிட்டார் எனக் கேட்டிருந்தாய் அல்லவா?

சிவப்பு வண்ணம் எந்த விஷயம் எழுதினாலும் சரி, ஒரு கதை அல்லது ஒரு தர்க்கம், ஒரு சாஸ்திரம், ஒரு பத்திரிகை விஷயம், எதை எழுதினாலும் வார்த்தை சொல்லுகிற மாதிரியாகவே அமைந்துவிட்டால் நல்லது. பாரதியார் கட்டுரைகள் கருத்துப் படம் . . XI Std Tamil புரட்சியையும் விடுதலையையும் குறிப்பது என்பதால் அடிமைத்தளையில் இருந்து இந்தியாவை விடுவிக்க வேண்டும் என்ற எண்ணம் பாரதியின் இந்தியா இதழின் வண்ணத்திலும் வெளிப்பட்டது.

வானதி, பாரதியின் புனைபெய ர்களைப் பட்டியலிட்டிருந்தாய், நல்லது. பாரதி தம்மைப்போ லவே பிறரையும் நேசிக்கும் பண்பாளர். அதனால்தான் தமக்கு மட்டுமல்ல தம் நண்பர்களுக்கும் ஆங்கிலேயர்களால் எந்தக் கெடுபிடியும் வந்துவிடக் கூடாது என்பதற்காக நண்பர்களின் பெய ர்களையும் அவர்கள் கூடிப்பேசும் இடங்களையும் புனைபெய ரில் பய ன்படுத்தி வந்துள்ளார். இப்புனைபெய ர்களை நகைச்சுவை உணர்வோடு வெளிப்படுத்தியிருப்பது எண்ணிஎண்ணி மகிழத்தக்கதாகும்.

மேலும், மற்றவர் பெயரை வெளிப்படுத்த விரும்பாத பாரதியின் இதழியல் அறத்தையும் இப்புனைபெய ர்களில் காணலாம். தம் மனைவி செல்லம்மாவையும் கண்ணம்மா , வள்ளி என்ற புனைபெய ர்களிலேயே குறிப்பிட்டிருப்பார். வானதி, தமிழ் இதழ்களில் தமிழ் மாதம், ஆண்டு குறிப்பிடும் முறையைக் கைய ண்டதில் முன்னோடியாகப் பாரதி திகழ்ந்ததாக எழுதியிருந்தாய். அதைப்போலவே தமிழ் இதழ்களில் தமிழில் தலைப்பிடுவதற்கும் பாரதியே முன்னோடி.

செய்திகளுக்கு ஆங்கிலத்தில் தலைப்பு எழுதிக் கீழே தமிழில் தலைப்பிடுவது அக்கால இதழ்களின் வழக்கம். தலைப்பிடலை ‘மகுடமிடல்’ என்றே பாரதியார் கூறுகின்றார். இந்தியா, சக்கரவர்த்தினி போன்ற இதழ்களில் - காலப்பகுதியில் ஆங்கிலத் தலைப்பையும் கலந்து பய ன்படுத்திய பாரதி, பிறகு ஆங்கிலத் தலைப்பு வைப்பதைக் கைவிட்டதோடு சுதேசமித்திரனில் அதைச் சாடியும் எழுதினார். மேலும், ஆங்கிலேயர்களின் கெடுபிடியால் பாரதி பாண்டிச்சேரி சென்றபோது இந்தியா இதழும் உடன் சென்றது வானதி.

எந்த நெருக்கடியான காலகட்டத்திலும் பாரதி தம் இதழியல் பணியைக் கைவிடவில்லை. இந்த இதழ்கள் எல்லாம் சிறப்பாகத் தொகுக்கப்பட்டு இன்றைக்கு நூலாக்கம் பெற்றுள்ளன. இதைப் போலவே பாரதியின் கடிதங்களும் கருத்துப்படங்களின் தொகுப்பும் நூலாக்கம் பெற்றுள்ளன. இவையெல்லாம் தமிழினத்தின் பேறு.

இதழாளராகப் பாரதியை நீ அடையாளம் கண்டதை ப்போலவே தமிழின் இன்னும் பல ஆளுமைகள யும் அடையாளம் கண்டு எழுத வேண்டும். உன் விசாலப் பார்வைக்கு என் பாராட்டுகள். உன் மின்னஞ்சல்களுக்காகக் காத்திருக்கிறேன் மகளே ! என்றும் உன், அன்பு அப்பா.

கற்பவை கற்றபின்... பாரதியார் இறக்கும் பொழுதும் இதழாளராகவே இறந்தார். இறந்து பHோவதற்கு முதல்நாள் இரவு, தூங்கச் செல்லும் முன்பு, நாளைக்கு,“அமானுல்லா கானைப் பற்றி ஒரு வியாசம் எழுதி ஆபிசுக்கு எடுத்துக்கொண்டு பHோகவேண்டும்” என்று இறுதியாகப் பாரதியார் கூறியுள்ளார்.

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →