மாமழை பHோற்றுதும் XI Std Tamil ச@ொக்கலிங்கம் : வா! மங்கை! என்ன ஊரKோடு வந்து விட்டாயா? (உட்புறம் பார்த்து) மல்லிகா, இங்கே வா, மங்கை வந்திருக்கிறாள் பார்!
மங்கை : ஆமாம் சித்தப்பா, இங்கே வந்து இரண்டு நாள்கள் ஆகிவிட்டன! சுத்தமான கா ற்று, கிணற்றுத் தண்ணீர், அம்மா கைச்சமையல் வேறெங்கே கிடைக்கும்? மல்லிகா : வாம்மா மங்கை! குழந்தைகள் நல்லாருக்காங்களா?
உன் கணவர் எப்படி இருக்கிறார்? மங்கை : எல்லோரும் நல்லா இருக்காங்க. நீங்க நல்லா இருக்கீங்களா? மல்லிகா : நல்லா இருக்கோம்மா.
மங்கை : நான் இனிமேல் நம்ம கிராமத்தில்தான் இருக்கப் போகிறேன். அப்பாவின் நிலத்தில், நம்மாழ்வார் ஐயாவின் வழியைப் பின்பற்றி இயற்கை முறையில் வேளாண்மை செய்யலாம்னு இருக்கேன். மல்லிகா: நல்ல முடிவுதான் எடுத்திருக்கிறாய் மங்கை! நமக்கெல்லாம் அவர்தானே வழிகாட்டி.
ச@ொக்கலிங்கம்: ச@ொல்லம்மா, நான் என்ன உதவி செய்யணும்? மனித உயிர்கள் வாழ அடிப்படையாக விளங்குவது வேளாண்மை. அதனால்தான் ‘உழவு உலகிற்கு அச்சாணி’ என்று வள்ளுவரும் ‘உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்’ என்று பாரதியாரும் போற்றுகின்றனர். இயற்கையிலிருந்து விலகி மண்ணுக்கும் மண்ணில் வாழும் உயிர்களுக்கும் ஊறு விளைவிக்கின்ற நிலை மாறவும் இயற்கை வேளாண்மை புதுப்பொலிவு பெறவும் வலியுறுத்துகிறது இவ்வுரையாடல்.
மங்கை : இயற்கை வேளாண்மை செய்ய வேண்டும் என்ற ஆசை மட்டும் எனக்கு இருக்கிறது! ஆனா, அதைப்பற்றி ஒண்ணும் தெரியாது. நீங்கதான் படிப்படியாக எனக்குச் ச@ொல்லித்தர வேண்டும். ச@ொக்கலிங்கம்: ச@ொல்றேன்மா.
வா, நம்ம பண்ணைக்குப் போய் எல்லாவற்றையும் சுற்றிப் பார்த்தபடி பேசுவோம்…. (மல்லிகா இரண்டு குவளைகளில் மோருடன் வருகிறார். இருவரும் மோர் குடிக்கின்றனர்) மங்கை : இப்படி வெண்ணெயோடும் வாசனையோடும் மோர் குடித்து எத்தனை நாளாச்சு? எங்க வாங்குறீங்க?
மல்லிகா : மோரை வாங்குவாங்களா? கொல்லையில இருக்குற நம்ம மாட்டோட பால்தான் இவ்வளவு வாசம். மங்கை : அப்படியா? எனக்குப் பால், மோர் எல்லாம் நெகிழிப் பையில் வாங்குற பழக்கம்.
அதான் கேட்டேன். (உள்ளிருந்து ச@ொக்கலிங்கம் கிளம்பி வருகிறார். அவருடன் மங்கையும் மல்லிகாவும் கிளம்புகிறார்கள்) மங்கை : இது என்ன சித்தப்பா, பனைமரம் வளக்கிறீங்களா?