📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Tamil · Page 51question

- ஜெயமோகன்

Chapter 2: Front Matter · Tamil

- ஜெயமோகன் XI Std Tamil கொண்டே இருந்தார். தரையிலுள்ள வேர் முடிச்சுகள் என் கால களைத் தடுக்கின. எழுபதை நெருங்கினாலும் டாக்டர் கே. மிகக் கச்சிதமான உடல் கொண்டவர்.

காடு அவருக்கு மீனுக்குக் கடல் போல. கொஞ்ச நேரத்தில் காட்டில் யானைக ளின் நெடி மெலிதாக வர ஆரம்பித்தது. யானைக ள் ஏற்கெனவே எங்களைக் கவனித்துவிட்டன என்று தெரிந்தது. மெல்லிய யானை உறுமல் கேட்ட புல்வெளியில் பன்னிரண்டு யானைகள் கூட்டமாக நிற்பதைக் கண்டோ ம்.

எங்கள் கண களை ஓட்டியபோது மேலும் ஆறு யானைக ள் மூங்கில் புதர களுக்குள் மேய்ந்துகொண்டிருந்தன. அவற்றின் அருகே நான்கு குட்டி யானைகளும் நிற்பது தெரிந்தது. டாக்டர் கே. தன் கருவிகளை எடுத்துப் பொருத்திக் கொண்டார்.

சிறிய துப்பாக்கி போன்ற ஒன்று. அதில் மாத்திரையே குண்டாக இருக்கும். யானையைக் கூர்ந்து தொலைநோக்கி யால் கவனித்தார். அதன் எடையை அவதானிக்கிறார் என்று தெரிந்தது.

எடைக்கு ஏற்பத்தான் அந்த யானைக்கான மயக்க மருந்தின் அளவைத் தீர்மானிக்க முடியும். அவர் முழுமையாகத் தனக் குள் மூழ்கி வேலை செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். கருவிகளைப் பொருத்திக் கையில் எடுத்துக்கொண்டு, “நீங்க இங்க இருங்க, நான் போய்ப் பார்க்கிறேன்” என்றார். அவரிடம் எதுவும் ச@ொல்ல முடியாதென்று ஏற்கெனவே நான் நன்றாக அறிந்திருந்தேன்.

அந்த யானை, “பெரிய மரத்தடிக்குப் பக்கத்திலே நின்னுக்கிட்டிருக்கு. கீழே விழுந்தா அடிபட்டிரும். அதக் கொஞ்சம் சதுப்புப் பகுதி க்குக் கொண்டு வரணும். மத்த யானைகள் விவரம் புரியாம ரெஸிஸ்ட் பண்ணும்” என்றார்.

யானைக ளுக்குத் தெரியுமா, இந்தக் காயத்துக்குக் காரணம் மனுசங்கதான்னு என்று கேட்டேன். “கண்டிப்பா... ரKொம்ப நல்லாத் தெரியும்” என்றார். மனிதனின் கீழ்மைகள் நாள்தோ றும் வளர்வதன் சாட்சியாக யானைக ளின் மரணங்கள் நிகழ்கின்றன.

சுற்றுப்பயணம் என்ற பெயரில் காட்டுக்கு வரும் வசதியானவர்களும் படித்தவர்களும் குடித்துவிட்டு வெறியுடன் காட்டு மரத்தின் மீது வீசி எறியும் மதுக்குப்பிகள் மிகவும் ஆபத்தானவை . மற்ற எந்த மிருகத்தை விடவும் யானைக ளுக்கு மிக அபாயகரமானவை . யானையின் அடிக்கால், மணல் மூட்டை போன்றது. மரத்தடியில் கிடக்கும் குப்பியின் பாகங்கள் அதன் மகத்தான எடை காரணமாகப் பாதங்களுக்குள் முழுக்கப் புகுந்துவிடும்.

நடக்க நடக்க உள்ளே செல்லும். அதன் பின்னால் யானையால் நடக்கமுடியாது. கா யம் சீழ் வைக்கும். குருதிப் பாதைகளையோ எலும்பையோ அவை தொட்டுவிட்டதென்றால் அதன்பின் யானை உயிருடன் எஞ்சாது.

“ஆனால், உயிர் போற வலி இருந்தாலும் யானை அலறாது, துடிக்காது. கண் மட்டும் நல்லாச் சுருங்கி இருக்கும். உடம்பு அங்கங்க அதிரும். யானை சம்மதிச்சா அதுக்கு மயக்க மருந்தே கொடுக்காமக்கூட அறுவைச் சிகிச்சை பண்ணலாம்.

அந்த அளவுக்குப் பொறுமையா ஒத்துக்கிட்டு நிக்கும். என்ன ஒரு படைப்பு. கட வுள் அவரKோட நல்ல மனநிலையில் படைச்சிருக்கார்” என்று ச@ொல்லிக்கொண்டே டாக்டர் கே. ஓடையைக் கடந்து இறங்கினார்.

நிகண்டுகளில் யானையைக் குறிக்கும் வேறு சொற்கள் . கயம் . வேழம் . களிறு .

பிளிறு . களபம் . மாதங்கம் . கைம்மா .

வாரணம் . அஞ்சனாவதி . அத்தி . அத்தினி .

அரசுவா . அல்லியன் . அனுபமை . ஆனை .

இபம் . இரதி . குஞ்சரம் . வல்விலங்கு .

கரி . அஞ்சனம். XI Std Tamil

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →