📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Tamil · Page 50poem

மழைக்கால மலர்கள்

Chapter 2: Front Matter · Tamil

மழைக்கால மலர்கள் XI Std Tamil டாக்டர் வி. கிருஷ்ணமூர்த்தி, வனத்துறையின் மிருக டாக்டராக முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் டாப் ஸ்லிப்புக்கு வந்தவர். டாக்டர் கே. என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட அவர், காட்டு மிருகங்களுக்கும் பழக்கப்படுத்தப்பட்ட மிருகங்களுக்கும் மருத்துவ உதவி அளிப்பதைப் பணியாகக் கொண்டவர். ஆனால் மெல்ல மெல்ல யானைகளுக்குரிய சிறப்பு மருத்துவராக அறியப்பட்டார். தமிழக வனத்துறையில் யானைகளைப் பற்றி நன்கறிந்தவர் என்று ஆன பின்னர் எங்கே யானைக்கு என்ன பிரச்சனை என்றாலும் அவர்தான் செல்ல வேண்டுமென்ற நிலை வந்தது. இந்தியாவில் மட்டுமல்ல, ஒரு கட்டத்தில் உலகத்தின் பல நாடுகளில் உள்ள யானைக ளுக்கும் அவர்தான் மருத்துவ ஆலோசகர். டாக்டர் கே. யானைக ளின் உடல்நிலையைப் பேணுவதற்காக உருவாக்கிய விதிமுறைகள்தான் இந்திய வனவியல் துறையின் கையேடாக இன்றும் உள்ளது. கிட்டத்தட்ட அதே குறிப்புகளின் இன்னொரு வடிவமே கா சிரங்கா காண டாமிருகங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது என்கிறார்கள். ஒருமுறை முதுமலையில் ஒரு யானைக்குக் கா ல் வீங்கி அது காட்டில் அலைவதாக த் தக வல் வந்தபோது டாக்டர் கே. யுடன் நானும் வனத்துறை அதிகா ரி என்ற முறையில் சென்றேன். காட்டுக்குள் அந்த யானை இருக்குமிடத்தைக் குறும்பர் ஏற்கெனவே கண்டு வைத்திருந்தார கள். அவர்களை ஏற்றிக்கொண்டு ஜீப்பில் காட்டுக்குள் நுழைந்தோ ம். அதுவும் பழங்காலக் குதிரைப்பாதைதான். நெடுந்தூரம் சென்றபின் ஜீப்பை நிறுத்திவிட்டு நானும் டாக்டரும் காட்டுக்குள் சரிவில் இறங்கிச் சென்றோம். துப்பாக்கியுடன் இரு வனக்காவலர்களும் மற்ற பொருள்களுடன் இரு குறும்பர்களும் எங்களுடன் வந்தார்கள். உடலை அறுக்கும் வேய்மூங்கில் இலைகளை அகற்றி டாக்டர் கே. முன்னால் சென்று காட்டின் வளத்திற்கு அடிப்படையாக விளங்கும் யானைகளை க் ‘காட்டின் மூலவர்’ என்பர். மனிதர்கள் அல்லாத உயிரினங்களில் தன்னை அறியும் ஆற்றலைப் பெற்றதும் மனிதர்களின் குணங்களில் பலவற்றைக் கொண்டதுமான யானைகள் நமது பண்பாடு, கல களின் பிரிக்க முடியாத கூறாக விளங்குகின்றன. அவற்றுக்குத் தெரிந்தோ தெரியாமலோ நாம் பல்வேறு இன்னல்களை இழைக்கிறோம். வானத்து நிலவும் மண்ணுலகத்துக் கடலும் போல் என்றும் அலுக்காத யானைகளின் பேருருக் காட்சியைக் காண அவற்றின் தடத்தைப் பின்தொடர்வோம்.

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →