📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Tamil · Page 190question

சாலைப் பாதுகாப்பு

Chapter 2: Front Matter · Tamil

சாலைப் பாதுகாப்பு எட்டாவது படிக்கையில், கால் எட்டாத பருவத்தில் இருசக்கர ஊர்தியை ஓட்டும் மகனைப் பெருமையுடன் பார்க்கும் பெற்றோர், கல்லூரி படிக்கும்போது நச்சரித்து வாங்கிய புதுவண்டியை மிகவேகமாக ஓட்டுவதைப் பார்க்கும் போது அடிவயிறு கலங்குவது உண்மை!. வேகம், விவேகம் அன்று! எந்தச் சாலையில், எந்தப் பகுதியில் எவ்வளவு வேகத்தில் போகவேண்டும் என்பதை அரசு, குறியீடுகளாக நட்டுவைத்திருப்பதைப் பார்த்து அதன்படி பயணித்தல் நல்லது. முன்னால் செல்லும் ஊர்திகளை முந்தும் பெருவிருப்பத்துடன் தங்கள் வண்டிகளை விரட்டுவதில் கிளர்ச்சி அடைகின்றனர் இக்காலத்தில் சிலர்.

பச்சை விளக்கு எரிகிறதா - செல்க! மஞ்சள் விளக்கு எரிகிறதா - விரைவாகச் செல்க! சிவப்பு விளக்கு? - காவலர் இல்லையெனில் மிகவிரைவாகச் செல்க ......என்பதான போக்கு மாறவேண்டும்.

சாலையில் ஊர்தி ஓட்டுவதில் இராணுவக் கட்டுப்பாடு வேண்டும். தலைக் கவசம் – உயிர்க் கவசம் ‘தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போய்விட்டது’ என்ற கூற்று, முற்றிலும் பொருந்துவது ஊர்தி ஓட்டுநர்களுக்குத்தான். அரசும் நீதிமன்றமும் அடுக்கடுக்காக அறிவுறுத்தியும், அபராதம் போட்டும் கவசம் அணிவதில் சுணக்கம்! சிலர் வாங்கி வைத்த கவசத்தை இருக்கைக்கு அடியிலும், சிலர் பெட்ரோல் கலனிலும் வைத்துவிட்டுக் காவலரைப் பார்க்கும்போது மட்டும் ஒற்றைக் கையால் எடுத்து மாட்டும் அழகு இருக்கிறதே!

ஏமாற்றுகிறார்களாம்! வரும் தலைமுறைக்கு வழிகாட்டியாக அல்லவா இருக்க வேண்டும். கீழ்வருவன தவிர்க்க மது அருந்தி ஊர்தி ஓட்டுதல் மக்கள் நெரிசலில் வேகமாக ஓட்டுதல் முறையான உரிமம் வாங்கும் முன் ஊர்திகளை ஓட்டுதல் ஒளிர்தலும் எரிதலும் ஊர்தியில் உள்ள விளக்குகளைச் சரியாகப் பயன்படுத்தும் முறையைப் போக்குவரத்து அலுவலகங்களிலும் ஓட்டுநர் பள்ளிகளிலும் முறைப்படி கற்றுக்கொண்டு அவற்றைப் பயன்படுத்தவேண்டும். ஊர்தியின் வேகம் குறைதல், வலப்பக்கமாகவோ, இடப்பக்கமாகவோ திரும்புவதற்கான சைகைகள் போன்றவற்றுக்கு இவ்விளக்குகள் பயன்படுகின்றன.

முகப்பு விளக்குகள் ஒளிரவேண்டும் - எரியவிடக்கூடாது! எதிரில் வரும் ஊர்தி ஓட்டுநர்களின் கண்களைக் கூசவைக்கும் அளவுக்கு முகப்பு விளக்கு விளக்குகளை எரியவிடுவது அவர்களைத் தடுமாற வைக்கும். ஆயுத பூசைக்குப் பூ வைத்துப் பொட்டு வைக்கும்போது மறக்காமல் முகப்பு விளக்கின் நடுவில் கருப்புப் பொட்டு வைத்துவிடுவது நன்று! போதையின் பாதை மது - ஓட்டுநருக்கு, சாலைக்கு, உயிருக்குக் கேடு!

போதையில் ஊர்தி ஓட்டுதல் விதிமீறல். போக்குவரத்துச் சட்டப்படி ஆறுமாத சிறைத் தண்டனை அல்லது ரூபாய் /- தண்டத் தEொகை (முதல் முறை). மீண்டும் போதையில் செய்யும் பயணம், இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது ரூபாய் /- தண்டத் தEொகை, அல்லது இரண்டுக்கும் வழிவகுக்கும். கவனத்தில் கொள க தலைதெறிக்கும் வேகத்தில் செல்லாதீர்கள் - தலை தெறிக்கும்!

நடைமேடை நடப்பவர்களுக்கே – ஓட்டுநர்களுக்கு இல்லை! போதையுடன் ஓட்டாதீர்கள் - வாழ்க்கையின் பாதை முடிந்துவிடும்! உரிமத்துடன், விவேகமுடன் ஓட்டுங்கள் - வாழ்க்கை ஒளிரும்! XI Std Tamil காற்றில் கலந்த பேரKோசை – சுந்தர ராமசாமி புரட்சிக்கவி - பாரதிதாசன் பதிற்றுப்பத்து – குமட்டூர்க் கண்ணனார் சிந்தனைப் பட்டிமன்றம் ஆக்கப்பெயர்கள் பாடப் பகுதி கற்றல் நFோக்கங்கள்  கருத்துகளைத் தொகுத்துக் கட்டுரைக்கும் திறன் பெறல்  கவிதையில் புரட்சிக்கருத்துகள் எழுச்சியுடன் வெளிப்படுத்தப்படும் நயம் அறிந்து சுவைத்தல்  சங்க இலக்கியத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள நாட்டுச் சிறப்பினை இன்றைய நிலையுடன் ஒப்பிட்டுக் கற்றல்  ஆக்கப்பெயர்களின் இன்றியமையாமை, நடைமுறைத் தேவை ஆகியவற்றை அறிந்து பயன்படுத்துதல்

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →