சிம்பொனித் தமிழர் ஆசியக் கண்டத்தில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு, சிம்பொனி இசைக் கோவையை உருவாக்கும் திறன் கைவராது என்பது மேற்கத்திய இசை வல்லுநர்களின் கருத்தோ ட்டமாகும். இந்தக் கற்பனைவாதத்தை உடைத்து ராயல் ஃபில்ஹார்மோனிக் இசைக்குழுவுக்கு, சிம்பொனி இசைக் கோலத்தை அமைத்துக்காட்டியவர் இசைமேதை ( மாஸ்ட்ரோ) இளையராஜா. அவர், தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணைப்புரத்தைச் சேர்ந்தவர். அவருடைய இயற்பெயர் இராசையா.
தாய் பாடும் தாலாட்டில் தEொடங்கித் தமிழ்நாட்டின் அனைத்து இசை வடிவங்களையும் அசைபோட்டு வளர்ந்த தமிழினத்தின் பெருமைக்குரிய இசை மேதை அவர். அன்னக்கிளி படத்தில் இசை அமைப்பாளராக அறிமுகமான இளையராஜாவின் இசையோட்டம் தமிழர் வாழ்ந்த திசைகளில் எல்லாம் தென்றலாய் நுழைந்து புதிய வாசல்களைத் திறந்தது. அவரிடமிருந்து புதுப்புது மெட்டுகள் சிறகு விரித்தன. கண்களை மூடிக்கொண்டு இளையராஜாவின் பாடல்களைக் கேட்டால், பாடலின் ஒவ்வொரு சரணத்திற்கு இடையிலும் அவர் சுழற்றும் இசைச் சிலம்பம் நம்மைப் புதிய திசைகளில் பறக்க வைக்கும்.
அவர், பழந்தமிழ் இசையையும் உழைக்கும் மக்களின் துள்ளல் இசையையும் மனத்தை மயக்கும் வகையில் கலந்து தந்தார். இவர், திரையிசையில் கர்நாடக இசை என்னும் பழந்தமிழிசையின் உன்னதத்தை உணர வைத்தவர்; பல இராகங்களுக்குத் திரையிசையில் கொடுத்த அறிமுக மெட்டுகள் மெல்லிசையில் புதிய உயரங்களைத் தEொட்டன.