புதிய நண்பர்களையும் உறவினர்களையும் அடையாளம் காட்டுகிறது. மேலும், இந்த யுகம் அறிவியல் தொழில்நுட்பக் கல்வி யுகம் என்று அறிஞர்கள் சொல்வதை, நாடுதான் நமக்கு அறிமுகப்படுத்துகிறது. எனவே, எல்லோரையும் இணைக்கின்ற பொதுவெளி, நாடுதான் என்பதை எதிரணியினர் உணர வேண்டும். நடுவர் அவர்களே!
நல்ல தீர்ப்பைத் தருமாறு வேண்டி விடைபெறுகின்றேன். நன்றி வணக்கம். நடுவர்: அன்பு நண்பர் அப்துல்லாவின் உரைவீச்சு நம் எல்லோரின் உள்ளங்களையும் கொள்ளைகொண்டது. எரிமலையாகக் கொதித்துவிட்டார்.
சரி, தோழி எலிசபெத்தின் நிலையைப் பார்த்தால்தான் இரக்கமாக இருக்கின்றது. வருக வருக. உங்கள் கருத்தோட்டங்களை அள்ளித் தருக. எலிசபெத்: வீட்டினுள் உலகத்தை எனக்கு அறிமுகப்படுத்திய என் பெற றோரைப் போ ற்றுகின்றேன்.
கற்றோர் நிறைந்த அவையை வணங்குகின்றேன். வீடு என்றால் எடுத்தெறிந்து பேசுகிற அளவிற்கு எதிரணிக்கு எளிதாகப் போய்விட்டதா? வீடு என்பது நீங்கள் நினைப்பதுபோலச் சிறு கூடு அன்று. அது நமது பண்பாட்டையும் மரபையும் காத்து நிற்கும் கருவூலம்.
எந்தவொரு தேடலும் இல்லத்திலிருந்துதான் தொடங்குகிறது. அன்பின் தலைவாசலாக, அறிவின் நாற்றங்காலாக வீடுதான் விளங்குகிறது. எப்படித் தெரியுமா? பெற்றோர் பாடிய தாலாட்டும், தாத்தா பாட்டி சொன்ன கதைகளும் நமக்கான கைவிளக்குகள் அல்லவா!
என்னை உப்பு மூட்டைதூக்கிச் சுமந்த, என் உடன் பிறந்தவர்களின் முதுகிலிருந்துதான் நேசத்திற்கான உள்ளுணர்வு பிறந்து வளர்ந்தது. உணவு எப்படி உற்பத்தியாகிறது என்று காட்டுவதற்காக என்னை விளை நிலத்திற்கு அழைத்துச் சென்ற பெற்றோர்களே என் முதல் பேராசிரியர்கள். பனையோல யில் காற்றாடி செய்யப் பழக்கியதும் நுங்கைத் தின்று அந்தக் காய்களில் வண்டி கட்டி விளையாடக் கற்றுக்கொடுத்ததும் எனக்குப் படைப்பாற்றல ச் சொல்லிக் கொடுத்ததும் என் வீடுதான். குழந்தைப் பருவத்தைச் சரியாகக் கடந்து வருவதற்குக் கற்றுக் கொண்டால் இளமைப் பருவம் இனிதே வளமடையும்.
எனவே, இல்லம் என்கிற வீடுதான் இளைஞர்களின் முன்னேற்றத்திற்குக் கலங்கரை விளக்கமாக நின்று வழிகாட்டுகிறது. நடுவர் அவர்களே! நீங்களும் உங்கள் வாழ்க்கையைத் திரும்பிப் பார்த்துத் தீர்ப்புச் சொல்லுங்கள். நன்றி வணக்கம்.
நடுவர்: கிடைத்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார் எலிசபெத். நன்று தோழி, உங்கள் நாவன்மைக்கு என் நல்வாழ்த்துகள். இப்போது அமுதாவின் நேரம், வாருங்கள் அமுதா! புதிய விடியலுக்கான வெளிச்சமாக உங்கள் பேச்சு அமையட்டும்.
அமுதா: “நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ! சொல்லடி சிவசக்தி – எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய் வல்லமை தாராயோ – இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே?” XI Std Tamil என்று எனக்கு நாட்டு நலத்தைப் புதிய வழித்தடத்தில் கற்றுக் கொடுத்த முண்டாசுக் கவிஞனை முதலில் வணங்கி அவைக்கு என் பணிவான வணக்கத்தைச் சொல்லி மகிழ்கிறேன். வீட்டைப் பற்றிய எண்ணங்களை விசாலப் பார்வையில் பார்க்காமல் எலிசபெத் ஏன் இப்படிக் குறுகிப் போனார் என்பது எனக்கு வியப்பாக இருக்கிறது. வீடு அப்படி என்ன பெரிதாய்க் கற்றுக் கொடுத்துவிட்டது?
ஆண்களுக்கு வேண்டுமானால் அது அறிவின் உறைவிடமாக இருக்கலாம். ஆனால், பெண்களுக்கு அது தங்கக் கம்பிகளால் செய்யப்பட்ட கூண்டுதான். வீடு எப்படிப்பட்ட சொலவடைகளைச் சொல்லிக் கொடுத்தது? எத்தகைய கதைகளைப் போ தித்தது?
‘அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு?’, ‘ பெண்புத்தி பின்புத்தி’ என்றுதானே சொன்னது. நான் பள்ளிக்கூடத்திற்கு வந்தபின்தான் “பெண்மை வெல்க என்று கூத்திடுவோம்” என்று பாரதி முழங்கியதையும் “பெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டில் மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே” என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் முழங்கியதையும் அறிய முடிந்தது. இன்று விஞ்ஞானிகளாக, கல்வியாளர்களாக, கவிஞர்களாக இளம் பெண்கள்