உணர்ந்துகொள்ள முடிகிறது. காலப்போக்கில் பொ ருளின் மாற்றத்தால் அவை பயன்படுத்தப்படும் நிலைமைக்கேற்றவாறு காரணப்பெ யர்கள் சிலநேரங்களில் இடுகுறிப்பெயர்களாகி விடுகின்றன. மரத்தால் செய்யப்பட்டுப் பின்புறம் சாய்ந்துகொள்ளவும் கைகளை வைத்துக் கொள்ள வசதியாகவும் நான்கு கால்களைக் கொண்ட இருக்கைக்கு நாற்காலி எனக் காரணம் கருதிப் பெயர் வைத்தனர். ஆனால், இன்று நான்கு கால்கள் இல்லாத இருக்கை சிலவற்றையும் நாற்காலி என்றே அழைக்கிறோம்.
ஒருகாலத்தில் காரணம் கருதி வழங்கப்பட்ட ஒரு பொருளுக்கான பெயர் இன்று இடுகுறியாக வழங்கப்படுகிறது. காலச் சூழலுக்கேற்றவாறு நம் பயன்பாட்டிற்கெனப் பல வேறு பெயர்களைப் புதியதாக ஆக்கிக் கொள்கிறோம். அவை இடுகுறியாகவும் இருக்கலாம்; காரணமாகவும் இருக்கலாம். இவ்வாறு, புதியதாக ஆக்கப்படும் சொல் ஆக்கப்பெயர் என அழைக்கப்படுகின்றது.
ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு என்பது பழமொழி. இதில் ஆத்திரம் கொண்ட ஒருவனைக் குறிப்பிட காரன் என்னும் விகுதி சேர்த்து ஆத்திரக்காரன் என்னும் சொல்லை உருவாக்குகிறோம். பெயர் அல்லது வினைச்சொற்களுடன் விகுதிகளைச் சேர்த்து ஆக்கப்படும் பெயர்ச்சொற்கள் ஆக்கப் பெயர்கள் (Derivative noun) எனப்படும். இவ்வாறு பெயர்ச்சொற்களை ஆக்கப் பயன்படும் விகுதிகளை ஆக்கப்பெயர் விகுதிகள் என்பர்.
தமிழில் ஆக்கப்பெயர் விகுதிகள் காரன், காரர், காரி, ஆள், ஆளர், ஆளி, தாரர், மானம் ஆக்கப் பெயர்களில் விகுதிகளே தனிச்சிறப்பு உடையன. தமிழ்ச்சொற்களோடு இவ்வகையான விகுதிகள் சேரும்போ து எண்ணற்ற புதுச்சொற்கள் உருவாகித் தமிழின் சொற்களஞ்சியம் விரிவடைகின்றது. தமிழ்மொழியில் ஆக்கப்பெயர்கள் பேச்சு வழக்கிலேயே மிகுதியாக உள்ளன. மலர்ந்த மலரைக் கண்டு வாடினாள் பூக்காரி இத்துளிப்பாவில் பூ விற்கும் பெண், பூக்காரி என்று அழைக்கப்படுகிறார்.
மேலும், நெசவு செய்பவரை நெசவாளி/நெசவாளர் என்றும் உழைப்பவரை உழைப்பா ளி/ உழைப்பாள ர் என்றும் அழைக்கப்படுகிற ஆக்கப்பெயர்கள் இன்றும் வழக்கில் உள்ளன. வண்டிக்காரன், சினிமாக்காரன், மாட்டுக்காரன், வீட்டுக்காரன், ஆட்டோக்காரன் போன்ற சொற்கள் எல்லாம் காரன் விகுதி சேர்க்கப்பட்ட ஆக்கப்பெயர்கள் என்பதை அறிவீர்களா? தெரியுமா?