பெயரெச்ச விகுதி புணர்ச்சி விதி அரும்பொருள் – அருமை + பொருள் ஈறு போதல் – அரு + பொருள் இனமிகல் – அரும்பொருள். மனையென – மனை + என இ ஈ ஐ வழி யவ்வும் – மனை + ய் + என உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே – மனையென. இசுலாமியத் தமிழ் இலக்கியத்தில் முதன்மையானதாக விளங்குவது சீறாப்புராணம். ‘சீறா’ என்பது சீறத் என்னும் அரபுச் சொல்லின் திரிபு ஆகும்.
இதற்கு ‘வாழ்க்கை’ என்பது பொருள். புராணம் – வரலாறு. நபிகள் பெருமானின் வாழ்க்கை வரலாற்றினைக் கூறும் இந்நூலை வள்ளல் சீதக்காதியின் வேண்டுகோளுக்கு இணங்க உமறுப்புலவர் இயற்றினார் என்பர். இந்நூல் விலாதத்துக் காண்டம், நுபுவ்வத்துக்காண்டம், ஹிஜிறத்துக் காண்டம் என்னும் மூன்று காண்டங்களையும் படலங்களையும் விருத்தப் பாடல்களையும் கொண்டது.
நூலை முடிப்பதற்கு முன்பே உமறுப்புலவர் இயற்கை எய்திய காரணத்தால் ‘பனி அகமது மரைக்காயர்’ இதன் தொடர்ச்சியாக சின்னச்சீறா என்ற நூலைப் படைத்துள்ளார். உமறுப்புலவர் எட்டயபுரத்தின் அரசவை ப் புலவர். கடிகை முத்துப் புலவரின் மாணவர். நபிகள் நாயகத்தின் மீது முதுமொழிமாலை என்ற நூலையும் இயற்றியுள்ளார்.
வள்ளல் சீதக்காதி, அபுல்காசிம் மரைக்காயர் ஆகியோர் இவரை ஆதரித்தனர். நூல்வெளி கற்பவை கற்றபின்... . நீங்கள் வாழும் நகரத்தின் வரலாற்றுச் சிறப்புகள த் திரட்டிப் படக் கட்டுரையாக்குக.
. ‘நான் பார்க்க விரும்பும் இடம்’ என்னும் தலை ப்பில் உங்களின் கருத்துகள க் காரணங்களுடன் பதிவுசெய்க. XI Std Tamil பெருங்கடல் முகந்த இருங்கிளைக் கொண்மூ! இருண்டுஉயர் விசும்பின் வலனேர்பு வளைஇப், பHோர்ப்புஉறு முரசின் இரங்கி, முறைபுரிந்து அறன் நெறி பிழையாத் திறன்அறி மன்னர் அருஞ்சமத்து எதிர்ந்த பெருஞ்செய் ஆடவர் கழித்துஎறி வாளின், நளிப்பன விளங்கும் மின்னுடைக் கருவியை ஆகி, நாளும் கொன்னே செய்தியோ, அரவம்?
பHொன்னென மலர்ந்த வேங்கை மலிதொடர் அடைச்சிப் பHொலிந்த ஆயமொடு காண்தக இயலித் தழல வாங்கியும் தட்டை ஓப்பியும், அழலேர் செயலை அம்தழை அசைஇயும், குறமகள் காக்கும் ஏனல் புறமும் தருதியோ? வாழிய, மழையே! (அகம். ) - வீரை வெளியன் தித்தனார் சொல்ல வந்த கருத்தை ‘உள்ளுறை’, ’இறைச்சி’ வழியாக உரைப்பது அகநானூற்றுப் பாடல்களின் சிறப்பு.
அதனை ப் பாடும் கவிஞர் சொல்லின் பயன்பாடு குறையாமல் கூறுவதோடு மரபின் நாகரிகம் குறைவுபடாது கூறவும் வேண்டும். அன்பை மறைக்கவும் வேண்டும்; பயன்பாடு கருதி வெளிப்படுத்தவும் வேண்டும். தலைவியைத் தலைவன் சந்திக்க வேண்டிய குறியிடத்தைப் பற்றிய குறிப்பைப் பொதிந்து வெளியிடுவது தோழியின் பொறுப்பு. திணை : குறிஞ்சி துறை: இரவில் சிறைப்புறமாகத் தோழி சொல்லியது.
சொல்லும் பொருளும் கொண்மூ – மேகம்; விசும்பு – வானம்; சமம் – போர்; அரவம் – ஆரவாரம்; ஆயம் – சுற்றம்; தழலை, தட்டை – பறவை களை ஓட்டும் கருவிகள்.