📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Tamil · Page 135question

சீறாப்புராணம்

Chapter 2: Front Matter · Tamil

சீறாப்புராணம் XI Std Tamil செம்மை நகரம் தானமும் ஒழுக்கமும் தவமும் ஈகையும் மானமும் பூத்ததிண் மறனும் வெற்றியும் ஊனமில் ஊக்கமும் ஒளிரக் காய்த்தநல் தீன்எனுஞ் செல்வமே பழுத்த சேணகர். - உமறுப்புலவர் சொல்லும் பொருளும் வரை – மலை; கம்பலை – பேரொலி; புடவி – உலகம்; எய்தல் – அடைதல்; துன்ன – நெருங்கிய; வாரணம் – யானை; பூரணம் – நிறைவு; நல்கல் – அளித்தல்; வதுவை – திருமணம்; கோன் – அரசன்; மறுவிலா – குற்றம் இல்லாத; தெண்டிரை – தெள்ளிய நீரலை; விண்டு – திறந்து; மண்டிய – நிறைந்த; தீன் – மார்க்கம். பாடலின் பொருள் மேருமலையினைப்போன்று மதீனா நகரின் மேன்மாடங்கள் உயர்ந்திருந்தன. அங்காடிகள் நிறைந்த தெருக்களில் எழுந்த ஒலி, பெருங்கடலொ லிபோன்று இருந்தது.

மதீனா நகரின் வீதிகள் பேரண்டத்தைப போன்று பர ந்திருந்தன. அந்நகரில் சிறிதும் இடைவெளியின்றி மாளிகைகள் நெருக்கமாக அமைந்திருந்தன. பழ மையான மதீனா நகரம், கலைஞர்களும் மறையவர்களும் நினைக்கின்ற பொருள் வளத்தைக் கொண்டது. அங்கு எந்தப் பொருளும் இல்லையென்று சொல்வதற்கு இல்லை.

அப்படிக் கேட்போ ர்க்கும் அப்பொருளை எல்லாம் வாரி வழங்கும் வள்ளன்மை கொண்டவர்கள் உண்டு. அவ்வள்ளல்களைவிடக் குறையாத பெரும் புகழைப் பெற்றது மதீனா நகரம். கட்டப்பட்ட தோரணங்களும் கொடிகளும் காடுபோல நெருங்கியிருந்தன; மலைபோன்ற யானைகள் அவ்விடத்தில் நிறைந்திருந்தன; வழிகள் யாவும் ஒழுங்குடன் காணப்பட்டன; இவற்றால் முழுமை பெற்ற பூமியைப்போல மதீனா நகரம் பொன்னெனப் பொலிந்தது. மதீனா நகரத்தில் வெண்சுண்ணச் சாந்தினைக்கொண்ட மாளிகைகள் ஒளிர்ந்தன; வீதிகளில் புதிய பூக்கள் சிந்திக் கிடந்தன; ஒவ்வொருவரையும் அழைத்துக் கொடுக்கும் விருந்தானது இனிமையுடன் இருந்தது; இதனால் அந்நகர் திருமண வீட்டைப்போன்று பொலிவுடன் காட்சியளித்தது.

பகை , வறுமை, நோய் முதலியவை மதீனா நகரிலிருந்து ஓடிவிட்டன. மேலும், குறைவில்லாத மானுட அறத்தை உடைய செங்கோல் ஆட்சி நடத்திப் பெரும்புகழ் பெற்ற சிறந்த அரசைப்போல ப் பொலிவுடன் இருந்தது மதீனா நகரம். அலைகடலானது முத்தையும் பல்வேறு அணிகளையும் சிதறுவதுபோல மதீனா நகரில் மக்கள் பல்வேறு மொழிகளைப் பேசுகின்றனர். தேன் அருந்தியவர்கள் மயங்குவதுபோல ப் பல வாறான பொருள் வளத்தால் ஒளி பெற்றுத் திகழ்கிறது மதீனா நகரம்.

மதீனா நகரில் தானம், ஒழுக்கம், தவம், ஈகை, மானம் முதலியன பூத்திருந்தன; திண்ணிய வலிமை நல்கும் வெற்றி, அவ்வெற்றியைத் தருகின்ற குறைவற்ற ஊக்கம் முதலியன காய்த்திருந்தன. தீன் எனும் செல்வம் பழுத்திருந்த செம்மை பொருந்திய நகராக மதீனா இருந்தது. XI Std Tamil இலக்கணக்குறிப்பு மலிந்த, மண்டிய, பூத்த, பொ லிந்த – பெயரெச்சங்கள்; இடன் – ஈற்றுப் போலி; பெரும்புகழ், தெண்டிரை – பண்புத்தொகைகள்; பொன்னகர் – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை; மாநகர், உறுபகை – உரிச்சொல் தொடர்கள்; தானமும் ஒழுக்கமும், தவமும் ஈகையும் - எண்ணும்மைகள் பகுபத உறுப்பிலக்கணம் மலிந்த – மலி + த்(ந்) + த் + அ மலி – பகுதி, த் – சந்தி, ‘ந்’ ஆனது விகாரம் த் – இறந்தகால இடைநிலை அ – பெயரெச்ச விகுதி நெருங்கின – நெருங்கு + (இ) ன் + அ நெருங்கு – பகுதி, (இ) ன் – இறந்தகால இடைநிலை அ –

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →