📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Tamil · Page 48grammar_exercise

சொற்சுவை

Chapter 2: Front Matter · Tamil

சொற்சுவை கண்காணி: பேச்சு வழக்கில் கங்காணி என்று பயன்படுத்தப்படுகிறது. கண்காணம் என்பது பயிர்த்தொழிலில் கையாளப்படும் ஒரு சொல். கங்காணம் என்றும் வழங்கப்படுகிறது. இதன் பொருள், நாள் தோறும் வயலில் நெல் அறுவடை செய்து களத்தில் ஒப்படி செய்யப்படும் நெல் அளவு என்பதாகும்.

கண்காணி என்பது இந்த ஒப்படியை மேற்பார்வை செய்பவரைக் குறிக்கும். XI Std Tamil ஆடுகம் விரைந்தே காயா கொன்றை நெய்தல் முல்லை போதவிழ் தளவமொடு பிடவலர்ந்து கவினிப் பூவணி கொண்டன்றால் புறவே பேரமர்க் கண்ணி ஆடுகம் விரைந்தே -பேயனார் ( கிழவன் பருவம் பாராட்டும் பத்து. ) இல்லறத்தில் அன்பும் அறனும் சிறக்க வேண்டித் தலைவன் பொன்னும் பொருளும் ஈட்ட வெளியூர் செல்வது பற்றிப் பல சங்கப் பாடல்கள் பேசுகின்றன. மக்கள் வாழ்வோடு இயைந்த மலர்கள், தலைவனின் வரவைத் தலைவிக்கு அறிவிக்கும் பாடலிது.

(ச@ொன்ன காலத்துக்கும் முன்பே வந்தேன் ச@ொல்லாமல் ச@ொல்லும் மலர்களைக் கண்டேன்) அகன்ற கடைவிழி உடையவளே காயா கொன்றை நெய்தல் முல்லை செம்முல்லை பிடவமாய்க் கொல்லைப் புறத்தில் கொட்டிக்கிடக்கும் பேரழகுப் பூக்களின் பாடலை க் கொண்டாடி மகிழ்வோம் விரைந்தோடி வா. திணை - முல்லை துறை -  பருவங் (கார் காலம்) குறித்துப் பிரிந்த தலைமகன், அப்பருவத்திற்கு முன்னே வந்தமை தோன்ற தலைவிக்கு உரைத்தது.

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →