📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Tamil · Page 60question

• மகரமெய் கெட்டுப் புணரும் · Part 2

Chapter 2: Front Matter · Tamil

- கருமை + கடல் கரு + கடல் - ஈறுபோதல் கரு + கடல் - (ங்) இனமிகல் . மை விகுதி கெட்டு நிற்கும் நிலைமொழியின் இறுதி எழுத்து மேற்சொன்ன எவ்விதியிலும் பொருந்தாதிருப்பின் இனையவும் என்னும் விதியைப் பயன்படுத்த வேண்டும். பைந்தளிர் - பசுமை + தளிர் பசு + தளிர் - ஈறுபோதல் பைசு + தளிர் - அடி அகரம் ‘ஐ’ ஆதல் பை + தளிர் - இனையவும் பை + தளிர் - (ந்) இனமிகல் ஈறு போதல் இடைஉகரம் இய்யாதல் ஆதி நீடல் அடிஅகரம் ஐ ஆதல் தன்னொற்று இரட்டல் முன்நின்ற மெய்திரிதல் இனம் மிகல் இனையவும் பண்பிற்கு இயல்பே (நன்னூல்- ) XI Std Tamil இலக்கணத் தேர்ச்சி கொள் . குற்றியலுகரப் புணர்ச்சியை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

. கருவிழி, பாசிலை, சிறியன், பெருங்கல் ஆகிய ச@ொற்களைப் பிரித்துப் புணர்ச்சி விதி தருக. . புணர்ச்சிவிதி தந்து விளக்குக : புலனறிவு, வில்ல டிந்தது, வழியில்லை, திரைப்படம், ஞாயிற்றுச்செலவு.

. விதி வேறுபாடறிந்து விளக்குக: தன்னொற்றிரட்டல் - தனிக்குறில்முன் ஒற்று உயிர்வரின் இரட்டும். இனமிகல் - வன்மைக்கு இனமாத் திரிபவும் ஆகும். .

பHொருத்துக அ) அடி அகரம் ஐ ஆதல் - செங்கதிர் ஆ) முன் நின்ற மெய் திரிதல் - பெருங்கொடை இ) ஆதிநீடல் - பைங்கூழ் ஈ) இனமிகல் - காரிருள் . கூற்றுகளைப் படித்துக் கீழ்க்காண்பனவற்றுள் சரியானதைத் தேர்க. அ) நிலைமொழியில் குற்றியலுகரமாகவும் வருமொழியின் முதல் உயிரெழுத்தாகவும் அமையும்போது ‘உயிர்வரின் உக்குறள் மெய்விட்டு ஓடும்’ என்னும் விதியைப் பெறும். ஆ) நிலைமொழியின் ஈற்றில் இஈஐ வரும்போது வகர உடம்படுமெய் பெறும்.

இ) பண்புப்பெயர்ப் புணர்ச்சியில் ‘ஈறுபோதல்’ என்னும் விதியே முதன்மையானதாக விளங்கும். ஈ) தன்னொற்றிரட்டல் என்னும் விதி பண்புப்பெயர்ப் புணர்ச்சிக்குப் பொருந்தும். i) அ, ஆ, இ சரி, ஈ தவறு ii) அ, இ, ஈ சரி, ஆ தவறு புணர்ச்சி விதிகள் ஏன்? இதிலிருந்து நீங்கள் பெறும் பயன்களை த் திரட்டுக.

கற்பவை கற்றபின்... XI Std Tamil மெய்ம்மயக்கம் மொழிக்கு முதலில் வரும் எழுத்துகளை யும், இறுதியில் வரும் எழுத்துகளை யும் அறிந்துகொண்டதைப் போலவே மொழிக்கு இடையில் வரும் எழுத்துகளை யும் அறிந்துகொள்ள வேண்டும். இவ்வாறான எழுத்துகள் தமிழ்ச் ச@ொற்களையும் பிறமொழிச் ச@ொற்களையும் கண்டறியவும் பயன்படுத்தவும் உதவுகின்றன. ச@ொல்லின் இடையில் மெய்யெழுத்துகள் அடுத்தடுத்து வருவது மெய்ம்மயக்கம் எனப்படும்.

இது உடனிலை மெய்ம்மயக்கம், வேற்றுநிலை மெய்ம்மயக்கம் என இரண்டு வகைப்படும். உடனிலை மெய்ம்மயக்கம் ச@ொற்களின் இடையில் ஒரே மெய்யெழுத்து அடுத்தடுத்து வருவது உடனிலை மெய்ம்மயக்கம் எனப்படும். தமிழில் க், ச், த், ப் ஆகிய மெய்யெழுத்துகள் தம் எழுத்துகளுடன் மட்டுமே சேரும் உடனிலை மெய்ம்மயக்க எழுத்துகள் ஆகும். இந்த எழுத்துகளின் அருகில் அவற்றுக்குரிய எழுத்து வரிசை மட்டுமே வரும்.

பிற எழுத்துகள் வாரா. அவ்வாறு வந்தால் அச்சொல் தமிழ்ச்சொல்லாக இருக்காது. எடுத்துக்காட்டாக, பக்கம் என்ற ச@ொல்லில் (ப + க் + க் + அ + ம்) க் என்னும் மெய்யெழுத்து தொடர்ந்து இருமுறை வந்துள்ளதைப் பாருங்கள். இதுபோலவே ச், த், ப் ஆகிய எழுத்துகளும் வரும்.

வேற்றுநிலை மெய்ம்மயக்கம் ச@ொல்லின் இடையில் வெவ்வேறு

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →