நற்றிணை XI Std Tamil பாடலின் பொருள் “நம் வீட்டில் தேன் கலந்த இனிய பால் உணவை ஒளிமிக்க பொற்கலத்தில் இட்டுச் செவிலித்தாயர் ஒரு கையில் ஏந்தி வருவர். நம் மகள உண்ண வைப்பதற்காக இன்னொரு கையில் பூச்சுற்றிய மென்மையான சிறு கோலை வைத்திருப்பர். வீட்டின் முற்றத்தில் பந்தரின்கீழ் ‘இதை உண்பாயாக’ எனச் செல்லமாக அக்கோலால் அடித்து வேண்டுவர். மகளோ, ‘நான் உண்ணேன்’ என மறுத்து முத்துப்பரல்கள் இட்ட பொற்சிலம்பு ஒலிக்க அங்குமிங்கும் ஓடுவாள்.
செவிலித்தாயர் அவளைப் பின்தொடர முடியாமல் நடை தளர்ந்து நிற்பர். இப்படிப்பட்ட விளையாட்டுப் பெண், நம் மகள். இவள் எப்படி இப்போது இத்தகைய அறிவையும் இல்லற நடைமுறையும் கற்றாள்? தான் மணந்துகொண்ட கணவன் வீட்டில் வறுமையுற்ற நிலையிலும் தன் தந்தையின் வீட்டில் பெற்ற வளமான உணவினைப் பற்றி நினைத்துப் பாராள்.
ஓடுகின்ற நீரிலே கிடக்கும் நுண்மணலில் இடைவெளி இருப்பதுபோல் ஒரு பொழுது இடைவெளி விட்டு ஒரு பொழுது உண்ணும் வன்மை பெற்றிருக்கிறாள். இது என்ன வியப்பு?” இலக்கணக் குறிப்பு வெண்சுவை, தீம்பால் – பண்புத்தொகைகள்; விரிகதிர், ஒழுகுநீர் – வினைத்தொகைகள்; பHொற்கலம், பHொற்சிலம்பு - மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகைகள்; கொண்ட – பெயரெச்சம்; அறிவும் ஒழுக்கமும் – எண்ணும்மை; பந்தர் - பந்தல் என்பதன் ஈற்றுப்போலி. பகுபத உறுப்பிலக்கணம் மெலிந்து – மெலி + த்(ந்) + த் + உ மெலி - பகுதி; த் - சந்தி, ந் ஆனது விகாரம் த் - இறந்தகால இடைநிலை உ - வினையெச்ச விகுதி. மறுத்து – மறு + த் + த் + உ மறு - பகுதி; த் - சந்தி; த் - இறந்தகால இடைநிலை உ - வினையெச்ச விகுதி.
புணர்ச்சி விதி சிறுகோல் – சிறுமை + கோல் ஈறு பHோதல் – சிறுகோல் பHொற்சிலம்பு – பHொன் + சிலம்பு ணன வல்லினம் வர ட ற வும் - பHொன்சிலம்பு. நற்றிணை எட்டுத்தொகை நூல்களுள் முதலாவதாக வைத்துப் பHோற்றப்படுவதாகும்; ‘நல்ல திணை’ என்ற அடைமொழியால் பHோற்றப்படும் சிறப்பினை உடையது. இது, நானூறு பாடல்களைக் கொண்டது. அடிகளைச் சிற்றெல்லையாகவும் அடிகளைப் பேரெல்லையாகவும் கொண்டது.
நற்றிணையைத் தொகுப்பித்தவன் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி. இதன் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். பHோதனார்: சங்ககாலப் புலவர். நற்றிணையில் 110ஆம் பாடலை மட்டும் பாடியுள்ளார்.
நற்றிணையின் பேரெல்லை அடி.விதிவிலக்காக அடிகளைக் கொண்டதாக இவரது பாடல் அமைந்துள்ளது. நூல்வெளி சூழலோடு பHொருந்திக் கல்வியை வளர்த்துக்கொள்பவர் பெண்ணே! ஆணே! - கலந்துரையாடல் நிகழ்த்துக.
கற்பவை கற்றபின்... XI Std Tamil சொல்லும் பொருளும் இகக்கும்- நீக்கும்; இழுக்கு- குற்றம்; வினாயவை- கேட்டவை . பாடலின் பொருள் சிறப்புடைய மாணவர் எனப்படுவோர் உலக வழக்கு, நூல் வழக்கு ஆகிய இலக்கணங்களை ஆசிரியர்களிடம் குற்றமின்றி அறிவர்; பாடங்களைப் போற்றிக் கற்பர். ஆசிரியர்களிடம் கற்ற பாடங்களை மீண்டும் நினைத்துப் பயிற்சி பெறுவர்.
ஆசிரியரை அணுகிப் பாடக்கருத்துகள க் கேட்டுத் தெளிவு அடைவர். ஆசிரியர்களைப் போன்ற உயர்சிந்தனை உடையவர்களுடன் கலந்துரையாடி விளக்கம் பெறுவர். தங்களது ஐயங்களை ஆசிரியர்களிடம் வினவித் தெளிவுறுவர். அவ்வாறு தெளிவுற்ற கருத்துகள ப் பிறர்க்கு உணர்த்தித் தெளிவடையச் செய்வர்.
ஆசிரியர் கூறும் கருத்துகள ஒருமுறைக்கு இருமுறை கேட்கும் மாணவர்கள் நூலைப் பிழையின்றிக் கற்கும் திறன் பெறுவர். மூன்றுமுறை கேட்போர் பாடக்கருத்துகள ப் பிறர்க்கு முறையாக எடுத்துரைக்கும் ஆற்றல் பெறுவர். இத்தன்மையில் பாடம் கேட்டலைக் கடமையாகக் கொண்ட மாணவர்கள் அறியாமையிலிருந்து நீங்கிச் சிறந்து விளங்குவர். தொல்காப்பியரால் தொகுத்தும் பகுத்தும் சேர்த்தும் எழுதப்பட்ட நூல் தொல்காப்பியமாகும்.
இந்நூல் எழுத்து, சொல் மட்டுமன்றிப் பHொருள் இலக்கணமான வாழ்வின் இலக்கணத்தையும் வகுத்துக் கூறுவதாகும். நாட்டின் எதிர்காலமாய் விளங்கும் மாண்பு பHொருந்திய மாணவர் எவ்வாறு கற்க வேண்டும் என்பதை இதன் சிறப்புப் பாயிர உரைவிளக்கப் பாடல் தெள்ளிதின் விளக்குகிறது. வழக்கின் இலக்கணம் இழுக்கின்று அறிதல் பாடம் போற்றல் கேட்டவை நினைத்தல் ஆசாற் சார்ந்துஅவை அமைவரக் கேட்டல் அம்மாண் புடையோர் தம்ம டு பயிறல் வினாதல் வினாயவை விடுத்தல் என்றின்னவை கடனாக் கொளினே மடம்நனி இகக்கும். ஒருகுறி கேட்போன் இருகாற் கேட்பிற் பெருக நூலிற் பிழைபா டிலனே.
முக்காற் கேட்பின் முறையறிந்து உரைக்கும்.