ஆந்திர மாநிலத்தில் ‘மல்’ என்ற வேர்ச்சொல் ஐகார ஈறு பெற்று மலை என வழங்கப்படுவதற்கு மாறாக ஆகார ஈறு பெற்று ‘மலா’ என்று வழங்கப்படுகிறது. கர்நாடகத்தில் மலை என்ற வடிவம் ‘தோணிமலை’ என்னும் இடப்பெயரில் ஒரே ஒரு முறை பயன படுத்தப்படுகிறது. மலையைக் குறிக்கும் மற் றொரு சொல்லான ‘மலே’ இடப்பெயர்களில் இடம்பெறுகிறது. கேரள மாநிலத்தில் பத்து ‘மலை’ விகுதி இடப்பெயர்கள் உள்ளன.
மேற்சொன்ன மலை, மலா, மலே எனப்படும் சொற்கள், தென்னிந்தியாவின் எந்த ஒரு மாநிலத்திலும் முன் னொட்டாகவோ பின் னொட்டாகவோ வருகின்றனவே அன்றி, தனிச்சொல்லாக வழங்கப்படவில்லை. தமிழ் மொழியில் ‘கோட்டை ’ என்ற சொல், காவல் மிகுந்த காப்பரண் கொண்ட மதில் சுவர்களால் சூழப்பட்ட கட்டமை ப்பைக் குறிக்கிறது. திராவிட வேர்ச்சொல் அகராதி, கோட்டை என்ற சொல்லோடு தொடர்புடைய பல்வே று திராவிட மொழிச் சொற்களைக் கீழ்வருமாறு பட்டியலிடுகிறது. தமிழ் கோட்டை, கோடு மலையாளம் கோட்ட, கோடு கன னடம் கோட்டே, கோண்டே தெலுங்கு கோட்ட துளு கோட்டே தோடா க்வாட் இவ்வாறு, எழுத்து வழக்குக் கொண்ட திராவிட மொழிகளில் மட்டுமல்லாமல் திராவிடப் பழ ங்குடி மொழிகளிலும்கூட கோட்டை என்ற சொல்லாக்கத்தின் வேர்களை இனங்கா ண முடிகிறது.
இந்தியாவில் ‘கோட்டை’ என்று முடியும் இடப்பெயர்களும் தமிழ்நாட்டில்தான் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இச்சொ ல் செயற்கைய ன காப்பரண்களான கோட்டைகள க் கட்டியெழுப்பிய நகர நாகரிகத்தின் பின்னணியில் தோன்றியது என்பதைவிட அதற்கும் தொன்மையான மலை சார்ந்த வாழ்வியல் சூழலில் உருப்பெற்றிருக்கும் என்பதுதான் உண்மையாகத் தோன்றுகிறது. ஏனெனில் ‘கோடு’ என்ற தமிழ்ச்சொல்லுக்கு மலையுச்சி, சிகரம், மலை என்ற பொருளோடு வல்லரண், கோட்டை என்ற பொருள்களும் உண்டு. மலையரண், காட்டரண் போன்ற இயற்கை அரண்கள், மதில் சுவர்களால் அமைந்த செயற்கைய ன கோட்டைகள விடவும் தொன்மையானவை.
இதைப் XI Std Tamil கொற்கை , வஞ்சி , தொண்டி, வளாகம் (KVT COMPLEX) கொற்கை, வஞ்சி, தொண்டி என்னும் ஊர்ப் பெயர்கள் பழந்தமிழர்களின் அரசியல், பொருளியல், மற்றும் பண்பாட்டு உருவாக்கத்தின் விளைவாக உருவானவை . சங்க இலக்கியம் காட்டும் பழந்தமிழ்ச் சமூகத்திற்குக் கொற்கை, வஞ்சி, தொண்டி ஆகிய பெயர்கள் ஆணிவேர் அடையாளங்கள் ஆகும். இப்பெயர்களில் ஒன்றைக்கூட வடமொழி இலக்கியங்கள் பதிவு செய்யவில்லை. சங்ககாலத் தமிழ் மன்னர்களின், குறுநிலத் தலைவர்களின் தலைநகரங்கள், துறைமுகங்கள், போர்க்களங்கள் ஆகியவற்றின் பெயர்களோடு வடமேற்குப் பகுதிகளில் உள்ள ஊர்ப்பெயர்கள் பொருந்திப் போகின்றன.
கொற்கை, வஞ்சி, தொண்டி வளாகம் (KVT COMPLEX) காட்டும் பொதுத்தன்மைகள் மிக முக்கியமானவை . இவை கடந்த கால வரலாற்றிற்கான அடையாளச் சின்னங்கள். போலவே ‘கோடை’ என்னும் தமிழ்ச்சொல் ‘மலை’ என்னும் பொருளில் வழங்குவதையும் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும். திராவிடர்களின் மலைப் பெருமிதத்தின் நீட்சியாக விளங்கும் இடப்பெயர்கள் வடமேற்கு நாடுகள ன பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானின் நெடுமலைகளின் இந்தியவியல் மற்றும் திராவிடவியல் ஆய்வாளரான ஆர்.
பாலகிருஷ்ணன் இ.ஆ.ப, ஆண்டுகளாக, இடப்பெயராய்வில் ஈடுபட்டு வருகிறார். வடமேற்கு இந்தியாவில் இன்றுவரை வழக்கிலுள்ள ‘கொற்கை, வஞ்சி, தொண்டி வளாகத்தை’ ஆய்வுலகின் கவனத்திற்குக் கொண்டுவந்தவர். தினமணி நாளிதழில் துணையாசிரியராகவும் கணை யாழி இலக்கிய இதழின் ஆலோசகர் குழுவிலும் தீவிரப் பங்காற்றியிருக்கிறார். அன்புள்ள அம்மா, சிறகுக்குள் வானம் உள்ளிட்டவை இவர்தம் நூல்கள்.
1984ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப்பணித் தேர்வை, முதன்முதலாக, முழுவதுமாகத் தமிழிலேயே எழுதி, முதல் முயற்சியிலேயே தேர்ச்சி