வாடிவாசல் - சி.சு. செல்லப்பா XI Std Tamil பிடிகயிற்றுக்கு அடங்கிப் பரம சாதுவாக அடைப்புக்குள் ஆடி அசைந்து வந்தது. “ மருதா” என்று உஷார்படுத்திக் கொண்டு பிச்சி லங்கோட்டை ஒருதரம் இறுக்கிவிட்டு, வயிற்றை எக்கிக் கொடுத்து ஒரு முழு மூச்சு இழுத்தான். குனிந்து இரு கைகள யும் தரையில் தேய்த்து, பிடி வழுக்காமல் இருக்கச் சுரசுரப்பாக்கிக் கொண்டான்.
“கிழக்கத்தியான் காரியைப் பிடிக்கப் போறான்!” “பய செத்தான்!” “செல்லாயி வாடியிலே அவனுக்கு முடிவு போட்டிருக்கு!” “குருத்துப் பைய ன், அநியாயமா...!” “ பட்டு உருமாவுக்கு ஆசைப்பட்டு உசிரை இந்தான்னு கொடுக்கிறானே பாவி!” “ரெண்டு பவுனுத் தங்கம் கண்ணுல உறுத்துமுல்லே!” ஆளுக்கொரு அபிப்ராயமாகக் கூட்டம் பரிமாறிக் கொண்டது. மேடை ஆசனத்திலிருந்து முன்சாய்ந்து குறுக்குக் கம்பியின்மீது கை வைத்து ஆர்வத்துடன் பார்க்கும்போ து அவர் பக்கமாகத் திரும்பிய பிச்சியின் பார்வையை ஜமீன்தார் சந்தித்து விட்டார். “ஹூம், பிடி!” என்று சொல்வதுபோல த் தன்னை அறியாமலேயே தலையை ஆட்டி விட்டார். “ பார்த்தியா, காளை வரவும் கிழக்கத்தியான் பம்மிட்டான்.” “அவ்வளவுதான் பய !” “சும்மா ஆர்ப்பாட்டக்காரனுங்க!” தன்னைச் சுற்றி எழுந்த இந்தக் கேலி வார்த்தைகளைக் கேட்ட ஜமீன்தார், “உளறாமே பாத்துக்கிட்டிருங்க,” என்று சுருக்கெனச் சொல்லி அடக்கினார்.
“அவன் ஒரு பிறவி! எந்த மாட்டு மேலே எப்படி விழணும்னு அவனுக்குச் சுபாவத்திலேயே ஊறிக் கிடக்கும்!” கண்டன வாய்கள் மூடிக் கொண்டன. திட்டி வாசலில் காரி ராஜாங்கமாக நின்றது. அதன் புடைத்த பளீரிடும் கருந்திமில் நெஞ்சுயர மரக்கட்டை அடைப்புக்கு மேலாக எடுப்பாகத் துருத்திக்கொண்டு வாடிவாசலில் வந்து நின்றது.
“ ராஜாளி மாதிரி வந்து நிக்குது பாரு! ” “நின்னுகுத்திக் காளைன்னா இதுதான்!” “இதையா கிழக்கத்தியான் பிடிக்கப் போறான்!” நின்ற காரி, வாடிவாசலில் தன் மீது கை போ டும்படி சவால் விட்டமாதிரி இருந்தது. அதன் மூச்சு தரையில் பட்ட இடங்களில் மண் சிதறிப் பறந்தது. ஒருதரம் செறுக்கடித்தது.
மறுபடியும் தரையை முகர்ந்து கொண்டிருந்தது. ‘ அப்பன் ஆசைக்கு மட்டுமன்றி உசிருக்கே உலை வைத்த காரி, அதன் கொ ம்பில் இன்னும் அப்பன் ரத்தம் வழிந்துகொண்டிருப்பது’ போன்ற பிரமை ஏற்பட, பிச்சிக்கு நேரெதிரில் வந்து நின்றபோ து அந்தக் கிழக்கத்திய வாலிபனான பிச்சி, அதன் கொ ம்புக்கு நேராகவும் மருதன் அதன் வால் பக்கமாகவும் அசையாமல் நின்றார்கள். பிச்சியின் கலித்தொகையில் ஏறுதழுவல் கொல்லே ற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே, ஆய மகள் அஞ்சார் கொலை ஏறு கொள்பவர் அல்லதை, நெஞ்சிலார் தோய்தற்கு அரிய - உயிர்துறந்து நைவாரா ஆய மகள் தோள். - கலி.
: - XI Std Tamil முகத்தையே சமிக்ஞைக்கு எதிர்பார்த்துக் கொண்டிருந்தான் மருதன். காளைக்கு மேலாகப் பார்த்துப் பிச்சி மருதனுக்குச் சமிக்ஞை செய்ததுதான் தாமதம்... “டுர்ரீ!” மருதன் குரல் வாடிவாசல் முணுமுணுப்பைக் கிழித்துக்கொண்டு எழுந்தது. கூவிக்கொ ண்டே முன் வந்த காளையின் வாலை ஜாடையாகத் தொட்டுவிட்டு வட்ட விளிம்போ ரமாகப் பின்னரித்தான்.
மருதன் கைப டவும் காளை அவன் மீது பாய, சடக்கெனத் திரும்பியது. அது பிச்சியை விட்டுவிட்டு ஒரு சிறு கோண அளவுக்குத் திரும்பி இருக்கும். சில்வண்டு மாதிரி அட்டத்திலிருந்து பாய்ந்து அதன் திமிலில் இடது கையைப் போட்டு நெஞ்சோடு நெருக்கி அணைத்துக் கழுத் தோடு தன் உடலை ஒட்டிக்கொண்டு அதன் வலக்கொம்பில் கை