📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Tamil · Page 191grammar_exercise

வையத் தலைமை க>ொள்

Chapter 2: Front Matter · Tamil

வையத் தலைமை க>ொள் XI Std Tamil ஒருமுறை திருவாங்கூரில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளப் பெருக்கினால் ஏற்பட்ட துன்பத்தைத் துடைக்கப் பள்ளி மாணவர்களும் குழுக்கள் அமைத்துச் செயல்பட்டனர். ஒரு குழுவினர் நாஞ்சில் நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள தோவ ளை என்னும் இடத்திற்குச் சென்று பணியை மேற்கொண்டனர். அங்கிருந்த கிராம மக்களிடம் வெள்ளப் பெருக்கினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்துப் பேசி நிதி திரட்டினர்.

நண்பர் ஒருவரிடம் ‘ ஜீவா மறைந்துவிட்டார்’ என்றேன். ஜனவரி மாதம் பதினெட்டாம் தேதி. நண்பகல் வேளை. செய்தி, தபால் நிலையத்துக்கு வந்து ஒரு மணி நேரம்கூட ஆகியிருக்கவில்லை.

‘ஆ!’ என்று கூவி ஸ்தம்பித்து நின்ற நண்பர், இரண்டொரு நிமிஷங்களுக்குப்பின் ‘கூட்டத்தில் பேசிக்கொண்டிருக்கும்போதா?’ என்று கேட்டார். ‘ஏன் அப்படிக் கேட்கிறீர்கள்?’ எனக் கேட்க எண்ணியவன் ‘தெரியாது’ என்ற சொல்லோடு நிறுத்திக்கொண்டேன். அரைமணி நேரத்திற்குப்பின் மற்றொரு நண்பர் காதில் இச்செய்தியைப் போட்டபோது, அவரிடமிருந்தும் அதே கேள்வி பிறந்தது ஆச்சரியத்தை அளித்தது. இருவரது வாயிலிருந்தும் ஒரே கேள்வி புறப்பட்டதைத் தற்செயலான காரியம் என எண்ணி மறந்துவிடுவதும் சுலபம்தான்.

ஆனால், நான் அவ்வாறு எண்ணவில்லை. அதற்குக் காரணமும் உண்டு. மேடையில் வாழ்ந்த மனிதர் நண்பர்களைப் பொ றுத்தவரையில் ஜனப்பிரளயத்தின் முன்னால் நின்று சங்கநாதம் எழுப்பிக் கொண்டிருக்கும்போதே, அக்குழுவிற்குத் தலைவராக இருந்த ஜீவா அப்போது பள்ளி இறுதிப்படிப்புப் படித்துக்கொண்டிருந்தார். அரசியல் சிந்தனையிலும் பொதுவுடைமைச் சிந்தனையிலும் கூர்வாளாய் மெருகேற்றிக்கொண்ட ஜீவா, சமூக நலனுக்காகத் தம்மை ஈடுபடுத்திக்கொண்ட முதல் நிகழ்வு அது.

அண்டம் முட்ட எழுந்து நாற்றிசையிலும் அலையலையாய்ப் பரவும் அப்பேரோசையில் அவர் கலந்துவிடுவதே ஜீவாவின் முத்திரைகொண்ட மரணமாக இருக்கும் போ லும். அப்போ துதான் நாடகத்தின் இறுதிக் காட்சி, முந்திய காட்சிகளுடன் பொருந்தி அமையும் போலும். மேடையில் வாழ்ந்த மனிதன், வாழ்ந்த இடத்தில்தானே மறைந்திருக்கவும் வேண்டும்? இவ்வாறு எண்ணுகிறது பேதை மனசு.

ஜீவா என்ற தொண்டன் தமது இறுதிமூச்சு நிற்பதுவரையிலும் கர்ஜித்துக்கொண்டுதான் இருந்திருப்பான் என்பதில் இவர்களுக்கு எத்தனை நம்பிக்கை! எனவேதான் ‘மூச்சு நின்றுவிட்டது’ என்று நான் சொன்னபோது ‘பேச்சு நின்றபோதா?’ எனத் திருப்பிக் கேட்கிறார்கள். எத்தனை அர்த்தபுஷ்டியான கேள்வி! ஜீவா தமது அரிய சேவையால் சர்வசாதாரண உள்ளங்களில்கூட எழுப்பியிருக்கும் சித்திரம்தான் எத்தனை ஜீவகளையுடன் காட்சி தருகிறது!

நெஞ்சோடு வளர்ந்த கனவு ஜீவா தமக்கென ஒரு தத்துவத்தைச் சிருஷ்டித்துக் கொண்டவர் அல்லர். அவர்,

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →