📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Tamil · Page 14question

யுகத்தின் பாடல்

Chapter 2: Front Matter · Tamil

யுகத்தின் பாடல் XI Std Tamil புதுக்கவிதை - விளக்கம் மரபு சார்ந்த செய்யுள்களின் கட்டுப்பாடுகளில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்ட கவிதைகளைப் புதுக்கவிதைகள் என்பர். படிப்போரின் ஆழ்மனத்தில் புதுக்கவிதை ஏற்படுத்தும் தாக்கமே முதன்மையானது. இது படிப்போரின் சிந்தனைக்கு ஏற்ப விரிவடையும் பன்முகத்தன்மை கொண்டது. எளியவர்களும் தம் உணர்ச்சிகளைக் கவிதை வாயிலாக வெளிப்படுத்தும் வாய்ப்பைத் தந்தது புதுக்கவிதை எனலாம்.

தெரியுமா? கவிஞர் சு. வில்வரத்தினம், யாழ்ப்பாணத்தில் உள்ள புங்குடுத் தீவில் பிறந்தவர். இவருடைய கவிதைகள் மIொத்தமாக, ‘உயிர்த்தெழும் காலத்துக்காக’ எனும் தலைப்பில் 2001இல் தொகுக்கப்பட்டன.

இவர் கவிதைகள் இயற்றுவதுடன் சிறப்பாகப் பாடும் திறனும் கொண்டவர். வில்வரத்தினத்தின் இரண்டு கவிதைகளிலிருந்து தேர்ந்தெடுத்த பகுதிகள் பாடப்பகுதியில் இடம்பெறுகின்றன. நூல்வெளி தன் இனத்தையும் மIொழியையும் பாடாத கவிதை, வேரில்லாத மரம்; கூடில்லாத பறவை. - இரசூல் கம்சதோவ் உயிர்ப்பு என் புன்னகையைக் கூட மொழிபெயர்க்க முடியாத அந்நிய தேசத்தில் எனக்கு நானே அகதியானேன்.

உணர்வுகளைச் சொல்ல முடியாமலும் உதற முடியாமலும் குரலற்றுக் கிடந்தேன் என் காயத்தை வருடிச் சென்றது மின்னலெனக் கடந்த தாய்ம ழியின் அமுதிசை துள்ளி உயிர்த்தெழுந்தேன் பரவச வெளியில் நானுமோர் பறவையானேன். . தாய்மொழியே முதன்மையானது - இக்கூற்றுக் குறித்து வகுப்பில் கலந்துரையாடுக. .

‘காலத்தை வென்ற மIொழி’ என்னும் தலைப்பில் கவிதை படைக்க. கற்பவை கற்றபின்... XI Std Tamil கவிதை என்பது எது? கவிதை எழுதும் செயல்பாடு எப்படி நிகழ்கிறது?

கவிதை எழுதுகிறபோ து எழுதிக் கொண்டிருப்பவனுக்குள் என்ன நிகழ்கிறது? கவிதை எழுதி முடித்துவிட்ட பிறகு கவிஞனுக்கும் கவிதைக்கும் என்ன உறவு? அதை யார் முடிவு செய்கிறார்கள்? தொட ரும் இந்தக் கேள்விகளுக்கான பதில்களை எண்ணற்ற அழகியல்வாதிகளும் தத்துவ ஞானிகளும் கலை விமர்சகர்களும் மொழியியல் அறிஞர்களும் கொடுத்திருக்கிறார்க ள்.

அவற்றுள் நான் இதுவரை கேட்டது, கண்டது, படித்தது ஆகிய எல்லாவற்றையும் கூட்டிக்கழித்துப் பார்த்தால் , நான் மொழியில் மிதந்துகொண்டுதான் பிறந்ததாகத் தெரிகிறது. மொழியில் மூழ்கியபடிதான் எனது விழிகள் இந்த உலகைக் காண த் திறந்தன என்று உணர்கிறேன். என்னை விளக்கிய மIொழி எனக்கு மொழி என்பது அறிமுகமாவதற்கு முன்னால் பொருள்களும் விலங்குகளும் பறவைகளும் வானும் நிலவும் சூரியனும் மரங்களும் செடிகளும் இருந்திருக்கவே இல்லை. மொழி எனது உலகத்தை ஒவ்வொரு பொருளுக்கும் பெயர்களுடன் கட்டியெழுப்பியது.

இதன்பிறகுதான் ‘நான்’ என்ற ஒன்று பிறந்தது. எனது உலகம் என்பது மொழியினால் கட்டமைக்கப்பட்ட பிறகு அந்த உலகத்திலிருந்து தனித்துப் பிரிந்து நிற்கிற ‘நான்’ உதயமானேன் . நான் இன்றைக்கு நினைத்துப் பா ர்க்கிறேன். மொழியின் பொ ருளை அறிந்துகொள்ள த் தொட ங்கியது எந்த ஆண்டில்?

எந்த நாளில்? எத்தனை மணிக்கு? இவை அனைத்திற்கும் என்னிடம் பதில் இல்லை. நான் உணர்ச்சியினால் நிரம்பி யிருக்கிறபோது அந்த வேகத்தைப் பதிவு செய்வதற்குச் சொற்கள் உதவும் என்று எப்போது தோன்றத் தலைப்பட்டது?

மIொழியென்ற ஒன்று பிறந்தவுடன் ‘உலகம்’ என்பதும் ‘நான்’ என்பதும் தனித்தனியாகப் பிரிந்து தங்களைத் தனித்துவமாக நிலை நிறுத்திக்கொள்கின்றன. - எர்னஸ்ட் காசிரர் மொழி என்ற ஒன்று என்னுள் தோன்றியவுடன்தான் உலகம் எனது கவனிப்புக்குரிய ஒன்றாக மாறியது. எனது உலகத்தை இழையிழையாகப் பிரித்தும் வகுத்தும் தொகுத்தும் விதவிதமான தூரங்களில் வைத்தும் கொடுத்தது மொழி. இதன்மூலமாக எனக்குள் உலகத்தின் கலைகளின் உச்சம் கவிதை என்பர்.

அக்கவிதையினை, இயன்றவரை பேசுவதுபோல் எழுதுவதுதான் உத்தமம் என்றும் அதுவே மானுடத்துக்கு எழுத்தாளர்கள் செய்யும் கடமை என்றும் கூறினார் மகாகவி பாரதி. கவிதை எவ்வாறு நிகழ்கிறது; எழுத்துமIொழியைக் கடந்து பேச்சுமIொழி எவ்வாறு கவிதைக்கு நெருக்கமாக இருக்கிறது என்பவை பற்றிப் பேசுகிறது இக்கட்டுரை.

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →