. சடங்குசார் கலைகள் மக்களின் வாழ்க்கைக்குள் பல்வேறு சடங்குகள் நிறைந்திருக்கின்றன. சடங்குகள் குடும்பவெளியிலும் சமூகவெளியிலும் இடம்பெறும். சமூக வெளியில் நடப்பன கலைகளாக மாறுகின்றன. நாட்டார் வழிபாடுகளில் குறிப்பிட்ட தெய்வத்தைப் பற்றிய வரலாற்றுக் கதைகளின் ஒரு பகுதியோ சில பகுதிகளோ சடங்குகளாக நிகழ்த்திக் காட்டப்படுகின்றன. சமயச் சடங்குகளோடு ஆடல்கலை நெருங்கிய தEொடர்பு கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் பரவலாக உள்ள சாமியாட்டம், தேவராட்டம், கணியன் ஆட்டம், பொன்ன ர் சங்கர் கதைப்பாடல் முதலானவற்றில் சடங்குக் கூறுகள் அதிகம் உண்டு. கொடை, தீமிதி விழா, முளைப்பாரி, சூரசம்ஹாரம், கள்ளர் வெட்டு, மயானக்கொள்ளை, ஏழு கன்னிமார் வழிபாட்டில் இடம்பெறும் கன்னிவிலக்கு (மாசி மகம்) எனத் தமிழக மாவட்டங்கள் பல வற்றிலும் கோவில் திருவிழாக்களில் சடங்கியல் நாடகங்கள் நடைபெறுகின்றன. இச்சடங்கியல் நாடகங்கள் பெரும்பாலும் அந்தந்த கோவில் விழாக்களின் முக்கிய நிகழ்வுகளாக உள்ளன.
📖 generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 161poem
1. சடங்குசார் கலைகள்
Chapter 69: படிப்போம் பயன்படுத்துவPோம் · ADVANCED TAMIL
Related topics
Have a question about this topic?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →