நாட்டார் அரங்கக் கலைகள் நாட்டார் அரங்கக் கலைகள் தமிழ்ப் பண்பாட்டின் முக்கியமான அடையாளங்களாகத் திகழ்கின்றன. இக்கலைகளை நிகழ்த்துபவர்கள் கற்பனைத் திறன் மிகுந்த உழைக்கும் கலைஞர்கள். இக்கலைகள் மனிதர்களின் வாழ்க்கைச் சூழல், தெய்வ வழிபாடு, அன்றாட வாழ்க்கைச் சிக்கல் இவற்றின் கூட்டுப்படைப்பாக வெளிப்படுகின்றன. அதே நேரத்தில் சமூகத்தை உள்வாங்கித் தங்களது உள்ளடக்கத்தையும் வடிவத்தையும் புத்தாக்கம் செய்து மக்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றன. இக்கலைகள் வட்டாரத் தன்மைக் கொண்டவை. தமக்கென மரபுவழிபட்ட பார்வையாளர்களைக் கொண்டவை. மக்கள் குழுக்களின் வழிபாட்டு மரபுகள், சடங்குகள், வட்டாரக் குழுக்கள், பழக்க வழக்கங்கள், கைவினைக் கலைகள் போன றவற்றின் அடிப்படையில் நிகழ்த்துகலைகளுக்கான பண்பாட்டு எல்லைகள் உருவாகின்றன. தமிழகம் முழுவதும் பர வலாக நிகழ்த்தப்படும் இக்கலைகளை அதன் தன்மைக்கேற்ப, . சடங்குசார் கலைகள் . பாடல்சார் கலைகள் . கருவிசார் கலைகள் என வகைப்படுத்துவர். இக்கலைகள் தமிழரின் மரபான பண்பாட்டுக்கூறுகளை விளக்குவனவாக அமைகின்றன. பார்வையாளர்கள் புரிந்துகொள்ளும் தன்மைக்கேற்ப இக்கலைகள் நிகழ்த்தப்படும். ஏதேனும் ஓர் ஊரில் அவ்வூர் சார்ந்த மக்களுக்காக நிகழ்த்தப்படும் இக்கலை வடிவங்களைப் பிற பகுதிகளிலிருந்து வரும் மக்களும் கண்டு இன்புறுவர்.
📖 generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 161poem
நாட்டார் அரங்கக் கலைகள்
Chapter 69: படிப்போம் பயன்படுத்துவPோம் · ADVANCED TAMIL
Related topics
Have a question about this topic?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →