📖 generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 204poem

4. மார்க்சிய அணுகுமுறை (Marxism)

Chapter 69: படிப்போம் பயன்படுத்துவPோம் · ADVANCED TAMIL

. மார்க்சிய அணுகுமுறை (Marxism) பொருளையும் அதன் இயக்கத்தையும் முதன்மையாகவும் மூலமாகவும் கொண்டு, உலகத்தையும் அதன் வாழ்வியல் உத்திகளையும் விளக்குவது மார்க்சியம். இக்கோட்பாடு, அடிப்படையில் இலக்கியத்தை ஆய்வு செய்யும் அரசியல், பொருளாதார, சமுதாய, தத்துவமே ஆகும். இக்கோட்பாட்டைக் கார்ல் மார்க்ஸ் என்பவர் உருவாக்கினார். அவர், சமூகம் வர்க்கமாகப் பிளவுபட்டிருப்பதை இனங்கண்டார். சமுதாய ஏற்றஇறக்கங்களுக்குப் பொருளே அடிப்படைக் காரணம் என்பதைச் சுட்டிக்காட்டினார். பிற தத்துவங்கள் உணர்வுகளை அடிப்படையாகக் கொண்டிருக்க, மார்க்சியம் பொ ருள் முதல் என்பதை மையமாகக் கொண்டுள்ளது. மக்களிடமிருந்து தEோன்றும் இலக்கியம், மக்களை நோக்கியே செயல்படுகின்றது. இதுதான் அதன் பொருண்மை. அதாவது, இலக்கியத்தை மக்களோடு நெருங்கச் செய்வதே மார்க்சிய திறனாய்வு அணுகுமுறையின் அடிப்படைப் பண்பாகும்.

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →