அறுபத்தொன்று உலகின் மிகப்பெரிய மொழிக்குடும்பம், இந்தோ – ஐரோப்பியம். எழுநூற்று எழுபது கோடிக்கும் மேற்பட்ட உலக மக்கள் தEொகையில், நானூறு கோடிக்கும் மேற்பட்டோர் இந்தோ ஐரோப்பியம் பேசுவோர். இக்குடும்பமொழிகள், நூற்றுக்கும் மேற்பட்டனவாக உலகில் உள்ளன. இம் மொழிகள் யாவற்றிலும் வழங்கும் சொற்கள் கோடிக்கணக்கில் இருக்கும்.
ஆயின், இக்கோடிக்கணக்கான இந்தோ ஐரோப்பிய மொழிகளின் சொற்களுக்கும் நானூற்று அறுபத்தொன்றே வேர்ச்சொற்களாக உள்ளன என்பார், ஆங்கில வேர்ச்சொல் அகராதி அறிஞர் மாமேதை கீற்று (Walter Skeat). இதன்வழி, வேர்ச்சொற்கள் நிலையான எண்ணிக்கை உடையன என்பதையும் அவற்றிலிருந்தே சொற்கள் காலந்தோறும் பெருகிப் பெருகி உருவாகின்றன என்பதையும் நம்மால் அறியமுடிகிறது. உலக மொழிகள் பல வற்றையும் வேர்ச்சொல் ஆய்வின்மூலம் மொழியறிஞர்கள் இன்று ஒன்றாக்கிக் காண்கின்றனர். அவ்வகை ஆய்வின் முடிவாக, உலக மொழிக்குடும்பங்களை ஒரு பெருங்குடும்பத்தில் அவர்கள் அடக்கிவிடுகின்றனர்.
இந்தோ ஐரோப்பிய மொழிகள் அனைத்திற்கும் உரியனவாகக் காட்டப்பட்டுள்ள வேர்ச்சொற்கள், பல்வேறு குடும்ப மொழிகளுக்கும் உரியனவாகப் பொ ருந்தியுள்ளன. திராவிடமொழிக் குடும்பங்களுக்குரிய வேர்ச்சொ ற்கள் எனப்படுவன பல வும், இந்தோ ஐரோப்பிய மொழிகளின் வேர்களுடனும் பொருந்தியிருப்பதைக் கால்டுவெல் முதலான அறிஞர்கள் உறவுபடுத்தி ஆய்ந்துள்ளனர்.