📖 generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 193grammar_exercise

சேரல் – கேரல் – கேரலன் - கேரளன்

Chapter 69: படிப்போம் பயன்படுத்துவPோம் · ADVANCED TAMIL

சேரல் – கேரல் – கேரலன் - கேரளன் சங்க இலக்கியத்தில் மலைநாடு, ‘சாரல்நாடு‘ எனச் சொல்லப்படுகிறது. சாரல் என்னும் இச்சொல், ‘சேரல்‘ எனத் திரிந்து, மலைநாட்டு அரசர்களைக் குறித்துள்ளது. களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல், குடக்கோ இளஞ்சேரல் போல ச் சங்க காலத்திலேயே அரசர்கள் பெயரில் இச்சொல் வழக்கு பெற்றுள்ளது. சேரல் என்னும் இச்சொல், பிறகு ‘சேரலன்‘ எனத் திரிந்தது.

சீர்த்தி - கீர்த்தி; செம்பு – கெம்பு போல் சகர, ககர மாற்றத்தில் ‘சேரலன்‘ பிறகு, ‘கேரலன்‘ ஆனது. மங்கலம் – மங்களம்; மெல்ல – மெள்ள போல ல – ள போலிமரபில் கேரலம் – கேரளம் ஆனது. இக் கேரளம் சொல்லே இன்று ‘கேரளா‘ (KERALA) எனப்படுகிறது. புழை என்பது, ‘துளையை‘க் குறிக்கும் தமிழ்ச்சொல்.

நீர் ஓடும் துளையுள்ள இடமே புழைக்கடை. பேச்சுவழக்கில், இப் புழைக்கடை, புழக்கடை எனப்படும். உள்துளையுடைய காய், ‘புழல்காய்‘. அதுவே, பிறகு ‘புடல்காய்‘ ஆனது.

நாழி + உரி = நாடுரி எனத் திரியுமென்பார் தEொல்காப்பியர். ழகரம் – டகரமாகத் திரிந்த அதே போக்கில்தான் புழல்காய், தமிழில் புடல்காய் ஆனது. இப் புடல்காய், புடலங்காய் – பொடலங்காய் - பொள்ள ங்காய் எனவும் மக்கள் வழக்கில் பல திரிபுகளில் வழங்குகிறது. ‘புல்‘ என்னும் ஒரு வேர்ச்சொல்லுக்குத் துளை என்பது பொருள்.

தEொல்காப்பியர், நிலைத்திணைகளைப் புல், மரம் என இரண்டாகப் பிரித்தார். உள்துளை நிலைத்திணைகளே புல்வகை என்றானது. இப் ‘புல்‘ சொல், புல் + து = புற்று எனவும், புல் – பொல் – பொல் + து – பொற்று – பொற்றல் – பொத்தல் எனவும் புல் – புள் – புளு – புளுகு எனவும் புல் – புள் – புளு – புழு – புழை எனவும் எல்லாம் பல ப்பல துளை என்னும் பொருள்தரும் சொற்களை அதன்போக்கில் ஈன்றுள்ளது. மலையாளமொழி, புடல் – புடலை – புடலங்காய் என்னும் தமிழ் வழக்கினைப் ‘படோல்‘எனக் கூறுகிறது.

மலையாளத்தில் மட்டுமல்லாமல், பிற திராவிடமொழிகளிலுள்ள சொற்களுக்கும் உரிய முழுப்பொருளையும் வேர்ப்பொருளையும் அறிய, தமிழே பெருந்துணையாக உள்ளது. இதன் உண்மைத்தன்மையைப் பர்ரோ , எமினோ ஆகிய மேல்நாட்டு மொழியியல் அறிஞர்கள் ஆய்ந்து தEொகுத்துரைத்த ‘திராவிட மொழிகளில் ஒப்பிலக்கண வேர்ச்சொல் அகராதி‘ (Dravidian Etymologjcal Dictionaries – Burrow & Emeneau) நூல்வழி காணலாம். தமிழின் செவ்வாம்பல், ‘கெம்பாவல்‘ எனவும், செவ்வாழை – ‘கெம்புபாளெ‘ எனவும், பாம்பு – ‘ஹாவு‘ எனவும், பல்லி – ‘ஹல்லி‘ எனவும் கன்னடத்தில் திரிந்துள்ளன. இக் கன்னட வழக்குகளின் உண்மைப்பொருளைத் தமிழுடன் உறவுபடுத்தித்தான் அறியமுடியும்.

தம்முன், தம்பி என்பன தமிழ்ச்சொற்கள். தன்முன் பிறந்த வன் - தம்முன்; தன்பின் பிறந்த வன் – தம்பி. தெலுங்கு, தம்பியைத் ‘தம்முடு‘என்கின்றது. குதித்தோடும் குதிரையை அதே தெலுங்கு, ‘குர்ரமு‘ என்கிறது.

ஊசல் – ஊஞ்சல் என்பன நல்ல தமிழ்ச்சொற்கள். தமிழின் ஊஞ்சலைத் துளு, ‘உஜ்ஜாலு‘ என்றுரைக்கும். 12th Std - Advance Tamil - Chaper - - :

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →