படத்தொகுப்பு நல்ல படம் எனக் குறிப்பிடப்படுவது இரண்டு மேசைகளில் உருவாகிறது. ஒன்று கதை எழுதுபவரின் மேசை. மற்றொன்று படத்தொகுப்பாளரின் மேசை. படத்தொகுப்பு என்பது ஒரு படைப்புக் கலைத்திறன்.
அத்திறனைப் பாடம் நடத்தி ஒருவருக்குள் உருவாக்கிவிட முடியாது. அது உளவியல் சார்ந்த கலை. கவிதை எழுதுவதைப்போல இயல்பாகவே அத்திறன் இருக்கவேண்டும். அது மிக நுட்பமான கல்வி ஆகும்.
முறையாக எழுதி முடித்த கதையின் அடிப்படையில் படம் பிடித்த அனைத்து துணிப்புகளையும் கதை கூறும் வரிசையில் ஒன்றன்பின் ஒன்றா க அடுக்குவதே படத்தொகுப்பாகும். பல துணிப்புகளைக் கொண்ட ஒரு காட்சியில் எதை முதலில் காட்டுவது, எதை அடுத்ததாகக் காட்டுவது என்ற உளவியல் நுட்பம் நல்ல படத்தொகுப்பாளருக்கு இருக்க வேண்டிய ஒரு தகுதியாகும். ஒரு கதை எவ்வாறு சிறந்த திரைப்படமாகத் தயாரிக்கப்படுகிறது என்பது அதன் திரைக்கலை நுட்பங்கள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதைப் பொ ருத்தே அமைகின்றது. திரைப்படத்தின் இந்த முக்கியமான நுட்பங்களை அறிந்துகொள்ளும்போது திரைப்படம் சிறந்த கலைப்படைப்பாக உருவாகின்றது.
12th Std - Advance Tamil - Chaper - - :