📖 generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 154grammar_exercise

வசனம்

Chapter 69: படிப்போம் பயன்படுத்துவPோம் · ADVANCED TAMIL

வசனம் திரைப்படத்தில் வசனம் வகிக்கும் இடம் முக்கியமானது. கதையைப் புரிந்துகொள்ள பாத்திரங்கள் பேசும் வசனம் உதவிபுரிகிறது. திரைக்கதைக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைப் போலவே வசனத்திற்கும் முக்கியத்துவம் தரப்படுகிறது. இயக்குநரே வசனம் எழுதும்போது காட்சி களுக்கும் கதாபாத்திரப்பேச்சுக்கும் நல்ல சமநிலையை உருவாக்க முடியும்.

தேவையற்ற வார்த்தைகளுக்கு இங்கு இடம் இருக்காது. அந்த உரையாடல்கள் காட்சிகளைச் சார்ந்தே இருக்கும். சான்றாக பாலு மகேந்திரா தன் படங்களில் பாத்திரப் பேச்சுக்கான இடத்தைக் குறைத்து, காட்சிகளின்வழி கதைசொல்வதைப் பார்க்கலாம். கதாபாத்திரங்களாக வேடமிடும் நடிகர் நடிகையர் பேச வேண்டிய சொற்களும் அவற்றின் ஏற்ற இறக்கங்களுடனான தன்மையுமே உரையாடல் (Dialogue) எனப்படுகிறது.

திரைப்படம் அடிப்படையில் காட்சி ஊடகம் என்பதால் காட்சிகளின் அழகும், பொருட்செறிவுமே காட்சியை முன்னோக்கி வழி நடத்துகின்றன. அதற்கு உதவும் வகையில் உரையாடல்கள் அமையவேண்டும்.

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →