📖 generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 123poem

படைப்பு முகம்

Chapter 69: படிப்போம் பயன்படுத்துவPோம் · ADVANCED TAMIL

படைப்பு முகம் மார்க்ஸிம் கார்க்கி ( – ): உலகப்புகழ் பெற்ற இலக்கியப் படைப்பாளர்கள் வரிசையில் முன்நிற்பவர் மாக்சிம் கார்க்கி. இவர் ரஷ்யாவிலுள்ள நிழ்னி நோவோகார்டு என்னும் இடத்தில் பிறந்தார். இயற்பெயர் அலெக்ஸி மாக்சிகொவிச் பெஸ்கோவ். இவர் எழுதிய தாய் என்னும் புதினம் உலகப்புகழ் பெற்றது. இவர் செருப்புத் தைப்பது, மூட்டை தூக்குவது, மண்பாண்டம் செய்வது, வேட்டையாடுவது, ரயில் பாதை காவலன், மீன்பிடித்தொழில் செய்வது, இடுகாட்டுக் காவலன், பிணம் சுமத்தல், நாடக நடிகன், பழ வியாபாரி என பலதரப்பட்ட வேலைகளையும் செய்தவர். வாழ்க்கையின் வறுமையான பக்கங்களைத் தாம் அனுபவித்ததால்தான் உலகச் சிறப்புமிக்க உன்னத காவியத்தை அவரால் படைக்க முடிந்தது. ரஷ்யப் புரட்சியாளர் லெனினுடன் ஏற்பட்ட தொடர்பால் இருவரும் நெருங்கிய நண்பர்களாயினர். ஒரு மகனை நேசிப்பதைப்போல் லெனின் கார்க்கியை நேசித்தார். லெனின் புரட்சி நிதிவேண்டி கார்க்கியை அமெரிக்காவுக்கு அனுப்பினார். அங்கு அகிரோந்தாக் மலைப்பகுதியில் அமர்ந்து அவரால் எழுதப்பட்டதுதான் ‘தாய்‘ புதினம். கார்க்கி ஏராளமான நூல்களை எழுதியிருந்தாலும் உலகத்தை ரஷ்யாவின் பக்கம் திரும்பச் செய்தது இந்தப்புதினம்தான். “ஆனால், நாங்கள் அனைவரும் என்றோ ஒருநாள் சிறைக்குத்தான் போவோம். நீயும் இதைத் தெரிந்து வைத்துக்கொள்.“ அவளது கைகள் நடுங்க ஆரம்பித்தன. “ஆண்டவன் அருளிருந்தால் நீங்கள் எப்படியாவது தப்பித்து விடுவீர்கள் இல்லையா?“ என்று அமுங்கிப்போன குரலில் கேட்டாள். “முடியாது“ என்று மெதுவாகச் சொன்னான் அவன். “நானுன்னை ஏமாற்ற விரும்பவில்லை. தப்பிக்கவே முடியாது!“ அவன் புன்னகை செய்தான். “சரி, நீ மிகவும் களைத்திருக்கிறாய். போ, படுக்கப்போ. நல்லிரவு!“. பாவெல் சென்ற பிறகு, தன்னந்தனியாக நின்ற தாய் ஜன்னலருகே வெளியே பார்த்தவாறே நின்று கொண்டிருந்தாள். ஜன்னலுக்கு வெளியே மூட்டமாய் குளிராய் இருந்தது. தூங்கி வழிந்து கொண்டிருந்த வீட்டுக் கூரைகளின்மீது படர்ந்துள்ள பனித்துகள்களைக் காற்று விசிறியடித்து வீசியது: அந்த ஊதைக்காற்று சுவர்களில் மோதி அறைந்து, தரையை நோக்கி வீசும்போது கோபாவேசமாய் ஊளையிட்டது; சிதறிக் கிடக்கும் பனிப்படலங்களை தெருவழியே விரட்டியடித்துக் கொண்டு பின்தொடர்ந்தது. (தாய் புதினத்திலிருந்து ஒரு பகுதி) ஆல்பிரட் நோபலின் பெயரில் 1895ஆம் ஆண்டு நோபல் அறக்கட்டளை நிறுவப்பட்டது. இது சுவீடிய அரசு கல்விக்கழகத்தாலும் கரோலின்கா நிறுவனத்தாலும் நார்வே நோபல் குழுவாலும் தனியொருவருக்கோ நிறுவனங்களுக்கோ வழங்கப்படுகிறது. 1901ஆம் ஆண்டு முதல் வேதியியல், இயற்பியல், இலக்கியம், அமைதி, மருத்துவம் ஆகிய துறைகளில் பெரும்பங்களிப்பு நல்கியவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகின்றது. 1968ஆம் ஆண்டிலிருந்து பொருளியலுக்கான நோபல் நினைவு பரிசும் வழங்கப்பட்டு வருகின்றது. இரவீந்திர நாத் தாகூர் 1913ஆம் ஆண்டு தமது ‘கீதாஞ்சலி‘ என்ற நூலுக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசைப் பெற்றார்.

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →