தாய் - அத்தியாயம் – தேநீர் தயாராகிவிட்டது. அதை எடுத்துக் கொண்டு தாய் அந்த அறைக்குள் நுழைந்தாள். விருந்தாளிகள் அனைவரும் மேஜையைச் சுற்றி உட்கார்ந்தார்கள். நதாஷா ஒரு மூலையில் விளக்கடியில் ஒரு புத்தகத்துடன் உட்கார்ந்திருக்கிறாள்.
“மனிதர்கள் ஏன் இப்படி மோசமாக வாழ்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால்…“ என்று ஆரம்பித்தாள். “ஏன், அவர்களே மோசமானவர்களாக இருக்கிறார்கள்…“ என்று குறுக்கிட்டான் ஹஹோல். “… அதற்கு, வாழ்க்கையை அவர்கள் எப்படித் தEொடங்குகிறார்கள் என்று பார்க்க வேண்டும்…“ “நன்றாய்ப் பாருங்கள், கண்மணிகளே, நன்றாய்ப் பாருங்கள்“ என்று தேநீர் தயாரித்தபடி சொன்னாள் தாய். எல்லோரும் மௌனமானார்கள்.
“நீ என்ன சொல்கிறாய், அம்மா!“ என்று முகத்தைச் சுழித்துக்கொண்டே கேட்டான் பாவெல். “ என்னவா? “ அவள் ஒரு பார்வை பார்த்தாள்; எல்லோரும் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டாள். “என்னவோ நான் எனக்குள் பேசிக்கொண்டேன்“ என்று குழறினாள் அவள்; “நீங்கள் நன்றாகப் பாருங்கள் என்று சொன்னேன்.“ நதாஷா சிரித்தாள்.
பாவெல் உள்ளுக்குள் கிளுகிளுத்தான். “தேநீருக்கு நன்றி, அம்மா“ என்றான் ஹஹோல். “ தேநீரைக் குடித்துவிட்டு நன்றி சொல்லுங்கள்“ என்றாள் அவள். பிறகு, தன் மகனை லேசாகப் பார்த்துவிட்டு “நான் உங்களுக்கு இடைஞ்சலாக நிற்கிறேனா?“ என்று கேட்டாள்.
12th Std - Advance Tamil - Chaper - - :