📖 generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 58poem

பெரும் வாசகப்பரப்பு-இலக்கியத்தன்மை

Chapter 69: படிப்போம் பயன்படுத்துவPோம் · ADVANCED TAMIL

பெரும் வாசகப்பரப்பு-இலக்கியத்தன்மை விஷ்ணுபுரம், பின்தொடரும் நிழலின் குரல், காடு, ரப்பர், ஏழாம் உலகம், கொற்றவை போன்ற படைப்புகளின் மூலம் புதின இலக்கியத்தின் பன்முகத் தன்மையை வெளிக்கொணர்ந்தவர் ஜெயமோகன். மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்ட ’உபபாண்டவம்’, மதுரை மாவட்ட குற்றப்பரம்பரைப் பற்றிப் பேசும் ’நெடுங்குருதி’ போன்றவை எஸ். ராமகிருஷ்ணனின் முக்கியமான புதினங்கள். இவரது சஞ்சாரம் புதினம் 2018ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருது பெற்றது. பெருமாள்முருகனின் நிழல்முற்றம், கூளமாதாரி, மாதEொருபாகன் ஆகிய படைப்புகள் முக்கியமானவை. இவர்களோடு பாவண்ணன், தமிழவன், ஜோ டி குரூஸ் போன் றோரின் படைப்புகள் இலக்கியத்தன்மை வாய்ந்த பெரும் வாசகப்பரப்பினைக் கொண்டவை.

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →