📖 generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 58poem

பெரும் வாசகப் பரப்பு - பொழுதுபோக்கு

Chapter 69: படிப்போம் பயன்படுத்துவPோம் · ADVANCED TAMIL

பெரும் வாசகப் பரப்பு - பொழுதுபோக்கு தமிழில் வேடிக்கை, விளையாட்டு, குற்றம், மர்மம், காதல் ஆகியவை கலந்த வாசிப்புச் சுவைமிக்க படைப்புகள் பெருமளவில் விற்பனையான இதழ்களில் வெளிவந்தன. இவ்வகைப் படைப்புகளைத் தந்ததில் புகழ்பெற்றவராக சுஜாதா விளங்குகிறார். சுஜாதாவின் புனைவு நடை மிக நவீனமானது. என் இனிய இயந்திரா, மீண்டும் ஜூனோ போன்ற அறிவியல் புனைவுப் புதினங்களும் கரையெல்லாம் செண்பகப்பூ, கனவுத் தEொழிற்சாலை, ரத்தம் ஒரே நிறம் போன்ற புதினங்களும் குறிப்பிடத்தக்கவை. மனச்சலனங்களையும் உறவுச் சிக்கல்களையும் மையமாகக் கொண்ட படைப்புகளை எழுதியவர் பாலகுமாரன். ராஜராஜசோழனைப் பற்றி இவர் எழுதிய உடையார் என்னும் வரலாற்றுப் புதினம் இலக்கிய முக்கியத்துவம் வாய்ந்தது.

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →