பொருண்மைக் கோட்பாடுகள் பழந்தமிழ் இலக்கணநூலான தEொல்காப்பியம், ‘எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே‘ என்று சொல்லின் தன்மையைக் குறிப்பிடுகிறது. மேலும், “பொருண்மை தெரிதலும் சொன்மை தெரிதலும் சொல்லி னாகும்" என்றும் கூறுகிறது. ஆகவே, ஒரு சொல், சொல்லாகிய தன்னையும் குறிக்கும்; தான் குறிப்பிடும் வேறு பொருள்களையும் குறிக்கும். அச்சொல், சூழல் அடிப்படையில் பல வகையான பொருளை வெளிப்படையாகவும் குறிப்பாகவும் விளக்கி நிற்கும் என்பது, தEொல்காப்பியர் உணர்த்தும் பொருண்மைக் கோட்பாடு.
மொழியியல் அறிஞர்கள், பொருண்மை யியலைப் பல கோட்பாடுகளால் விளக்குகின்றனர். எடுத்துக்காட்டாகச் சசூர் என்பவர், சொல்லுக்கும் பொருளுக்கும் இடையிலான உறவு இயற்கையானதன்று என்று வலியுறுத்தியுள்ளார். அவர், சொல்லைக் குறிப்பான் எனவும், சொல் குறிப்பிடும் பொருளைக் குறிப்பீடு எனவும் வேறுபடுத்தியுள்ளார். ஃபுளும் பீல்டு என்பவர், தூண்டல் செய்கைக்கு எதிர்வினையாக அல்லது துலங்கலாக மொழி வெளிப்படுகிறது எனக் கூறியுள்ளார்.
மாலினோவ்ஸ்கியும் பிர்த்தும், ஒரு சொல்லின் சூழலை அறிந்துகொள்ளாமல், அச்சொல்லின் பொருளை அறிதல் இயலாது என்று கூறினர். இதனடிப்படையில் உணர்வுக் கோட்பாடு, மரபுக்கோட்பாடு, சூழல்கோட்பாடு, பயன்பாட்டுக் கோட்பாடு எனப் பல்வேறு கோட்பாடுகளை மொழியியல் அறிஞர்கள் உருவாக்கினர். இவ்வாறு, பல்வேறு கோட்பாடுகள் இருப்பினும் அவை யாவும் ஒரு சொல்லானது, தனித்துநின்று ஒரு பொருளையும் தEொடரில் வரும்போது பல பொருளையும் சூழலுக்கேற்ப உணர்த்தும் என்பதையே எடுத்துக்கூறுகின்றன. இனிச் சூழல்கோட்பாட்டின்வழிப் பொருள்கொள்ளும் முறைகுறித்துக் காண்போம்.