📖 generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 184grammar_exercise

பொருண்மையியல் – விளக்கம்

Chapter 69: படிப்போம் பயன்படுத்துவPோம் · ADVANCED TAMIL

பொருண்மையியல் – விளக்கம் நாம் பேசும்போது, பல சொற்களைப் பயன்படுத்துகிறோம். ஆனால், அச்சொற்கள் உணர்த்தும் பொருளின் தன்மையை உணர்ந்து பயன்படுத்துகிறோமா என்று உணர்வதில்லை. குறிப்பிட்ட ஒரு சொல், ஒவ்வொரு தEொடரிலும் வெவ்வேறு பொருள் தருவதனை எப்போதாவது அறிந்திருக்கிறோ மா? கீழ்க்காணும் எடுத்துக்காட்டுகளைக் கவனியுங்கள்.

தEொடர்கள் உணர்த்தும் பொருள் • ‘கை வலிக்கிறது‘. - உடலின் ஓர் உறுப்பு • ‘கையூட்டு கொடுப்பதும் வாங்குவதும் குற்றம்‘. - உழைப்பின்றி வரும் பணம் • ‘தன் கையே தனக்கு உதவி‘ - உழைப்பின் மேன்மை • ‘கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை‘ - அருகில் என்னும் பொருள் • கள்வனைக் கையும்களவுமாகப் பிடித்தனர் - ஒரு செயலை நேரடியாகப் பார்த்தல் • முருகன், வள்ளியைக் கைபிடித்தான் - திருமணம் புரிதல் • கண்ணனை ஒரு கை பார்த்துவிடவேண்டும் – சரியான பாடம் கற்பித்தல் • ஆட்டத்தில் ஒரு கை குறைகிறது – ஓர் ஆள் (எண்ணிக்கை) தேவை படித்தீர்களா? எத்தனை கைகள்?

என்னென்ன பொருள் தருகின்றன? மேற்குறிப்பிட்ட ஒவ்வொரு தEொடரிலும் ‘கை‘ என்னும் சொல், ஒவ்வொரு பொருள் தருவதை உணர்ந்திருப்பீர்கள். இதே சொல்லைப் பயன்படுத்தி உங்களாலும் வேறு சில தEொடர்களை உருவாக்கமுடியும் அல்லவா! ‘கை‘ என்பதன் அகராதிப் பொருள், மனித உடலின் ஓர் உறுப்பு.

‘கை‘ என்பது, அடிப்படையில் ஒரு பெயர்ச்சொல். இதே சொல், உணர்வுப் பொருளாகவும் பயன்பாட்டுப் பொருளாகவும் சூழலுக்கேற்பப் பொருள்மாறுகின்றது. ஆகவே, மொழிக்கூறுகள் பெற்றுள்ள பொருண்மைத் தன்மையை அகராதிப்பொருள், இலக்கணப் பொருள், உணர்வுப் பொருள், பயன்பாட்டுப் பொருள், சூழற்பொருள் என வகைப்படுத்திக் கூறல ம். 12th Std - Advance Tamil - Chaper - - :

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →