📖 generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 60grammar_exercise

புதினம் எழுதும் கலை

Chapter 69: படிப்போம் பயன்படுத்துவPோம் · ADVANCED TAMIL

புதினம் எழுதும் கலை புனைகதை இலக்கியம் எழுதப்படும் வடிவம், விவாதிக்கப்படும் மையப் பொருள் சார்ந்து சிறுகதை, புதினம் எனப் பிரித்துப் பேசப்படுகின்றது. உரைநடையில் இலக்கியம் எழுதப்படுவதற்கு முன்பிருந்த தனிக்கவிதைகளே சிறுகதைகளாகவும், கதை தழுவிய காப்பியங்களே புதினங்களாகவும் மாற்றம் பெற்றன என்றொரு பார்வை உண்டு. புதினம் என்பது, முழுமையான வாழ்வுப் போக்கை அனைத்து அறங்களோடும் சொல்லவந்த வடிவம். அதனால், ஒரு புதினம் நிகழும் களத்தின் அனைத்துக் கூறுகளுக்குள்ளும் சூழல்களுக்குள்ளும் கால இடைவெ ளிகளுக்குள்ளும் ஒரு புதின ஆசிரியன் தனது படைப்போட்டத்தை நிகழ்த்த வேண்டியுள்ளது.

சிறுகதை என்பது ஒரு மனநிலையை ஒரு சம்பவத்தை என வாழ்வின் ஒரு புள்ளியை மட்டும் சொல்லவந்த வடிவம். வாழ்வின் விரிந்துசெல்லும் பரப்புகளை விரித்தும் தE குத்தும் சொல்லி ஒரு முழுமையான பார்வையை வாசகனுக்குத் தரும் வடிவம் புதினம்.

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →