Criticism) சில விதிகளைத் தாம் திறனாய்வு மேற்கொள்ளும் இலக்கியத்தில் அப்படியே பொருத்திக் காணல். அன்பின் ஐந்திணையில், ‘தலைவனோ தலைவியோ சுட்டி ஒருவர்ப் பெயர் கொளப் பெற அர்‘ என்பது, தEொல்காப்பிய விதி. இவ்விதியை நெடுநல்வாடையில் பொருத்திக் காண்கிறார் நச்சினார்க்கினியர். அந்நூலில், தலைவன் பெயர் சுட்டப்பெறவில்லைதான்.
ஆனால், ‘வேம்பு தலையாத்த நோன்காழ் எஃகமொடு..‘ என்ற பாடலடியில், ‘வேம்பு‘ என்பது, பாண்டிய மன்னர்களுக்குரிய அடையாள மாலை என வெளிப்படையாகக் கூறப்பட்டுள்ளது. ஆகையால், இஃது அகநூல் அன்று, புறநூல். இந்நூலின் பாட்டுடைத் தலைவன், தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனே என்று நச்சினார்க்கினியர் உறுதியாகக் கூறுகிறார்.