📖 generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 177poem

தEொடரமைப்பில் சொற்களின் நிலை

Chapter 69: படிப்போம் பயன்படுத்துவPோம் · ADVANCED TAMIL

தEொடரமைப்பில் சொற்களின் நிலை சொற்கள் தEொடர்ந்து நின்று பொருள் தருவதனைத் தEொடர் என அறிந்துள்ளோம். ஒரு தEொடரில், சொற்களின் வரிசை முன்பின்னாக மாறி வந்தாலும் அத்தொடரின் பொருண்மை மாறாது இருக்குமானால், அதனை அமைப்பு மாற்றம் என மொழியியலார் குறிப்பிடுகின்றனர். இது, பொதுவான விளக்கமாகும். தமிழில், முற்றுத்தொடர்களில் எழுவாய் முதலிலும், செயப்படுபொருள் இடையிலும், பயனிலை இறுதியிலும் இடம்பெறுகின்றன. ஆனால், ஆங்கிலத்தில் செயப்படுபொருள் தEொடரின் இறுதியில் அமைகின்றது. எ.கா. நான் கடிதம் எழுதினேன் (த) I wrote a letter (E) தமிழ் இலக்கியங்களில் குறிப்பாகச் செய்யுள், கவிதை ஆகியவற்றில் எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் இடம் மாறியும் அமைவதுண்டு. இவை, கவிஞர்களின் உணர்ச்சி வெளிப்பாட்டால் அமைவன. எ.கா. ‘கண்டனன் கற்பினுக் கணியை கண்களால் . . .’ என்னும் கம்பராமாயணப் பாடலடியில், ‘கண்டனன்‘ என்னும் வினைமுற்று, தEொடரின் முதலில் வந்துள்ளது. இக் காலத்தில் உரைநடைகளிலும் செய்தித்தாள்கள் முதலான ஊடகங்களிலும் இதுபோன ற தEொடர்கள் பெரும்பான்மை யாகப் பயின்று வருகின்றன. இவ்வகைத் தEொடர்கள், பேச்சுத்தமிழில் இயல்பாகவே இடம்பெறுகின்றன. ஆனால், ஆங்கிலத்தில் மாறிவருதல் இயல்பில்லை. இனி, தEொடர்நிலையில் பெயரடை, வினையடை; பெயரெச்சம், வினையெச்சம்; முன் னொட்டு, பின் னொட்டு; உருபன்உறவு, இலக்கணஉறவு ஆகியவை அமையும் நிலை குறித்துக் காண்போம்.

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →