தமிழ், ஆங்கிலம் - தEொடரமைப்பு ஒப்பீடு சொற்கள் முறைப்படி அமைந்து, பொருளைத் தரும்போ து, அது சொற்றொ டராகிறது. அச்சொற்றொடர், மரபுநிலை பிறழாதவாறும் அதனைப் பேசுவோர், கேட்போர் ஆகியோரின் மனநிலைக்கு ஏற்றவாறும் அமையும்போது, கருத்துப் பரிமாற்றம் எளிதாகிறது. இம்மரபு, எல்லா மொழிகளிலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. ஏனெனில், மொழிக்குமொழி மரபுநிலை மாறுபடுவது இயல்பே. எடுத்துக்காட்டாக வினைமுற்றுகள், ஆங்கிலத்தில் தEொடரின் இடையிலும், தமிழில் தEொடரின் இறுதியிலும் நிற்கின்றன. எ.கா. செல்வி படம் வரைந்தாள் (த) - (வினைமுற்று, தEொடரின் இறுதியில் நின்றது.) Selvi drew a picture (ஆங்.) - (வினைமுற்று, தEொடரின் இடையில் நின்றது.) அதேபோல், திராவிட மொழிகளில் வினையடிகள், இடைநிலைகள் போன றவை ஒட்டுநிலையில் நிற்க, சீனம் முதலான மொழிகளில் தனிநிலையாக நிற்கின்றன. தEொடரமைப்பு நிலையில் காணும்போது திராவிட மொழிகள், இந்தோ - ஐரோப்பிய மொழிகளிலிருந்து பல வகையிலும் வேறுபடுகின்றன. இவற்றைப் பின்வரும் தலைப்புகளில் இனிக் காணலாம். . தEொடரமைப்பில் சொற்களின் நிலை . தEொடரமைப்பில் இயைபு .
📖 generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 177poem
தமிழ், ஆங்கிலம் - தEொடரமைப்பு ஒப்பீடு
Chapter 69: படிப்போம் பயன்படுத்துவPோம் · ADVANCED TAMIL
Related topics
Have a question about this topic?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →