தEொட்டான்- கெட்டான் தந்தை, மகனை வெட்ட கையில் அரிவாளுடன் நிற்பார். தாய்… எதற்காக இவ்வளவு கோபம் எனக் கேட்பார். கடை வீதியில் யாரோ ஒருத்தனோடு குடித்துவிட்டுத் தள்ளாடியபடி உன் புள்ள போறான்னு பக்கத்துவீட்டுக்காரர் சொல்றாரு. அப்படிப்பட்ட குடிகார மகன் இந்த வீட்டுக்குள்ள வரக்கூடாது.
என் மானம் மரியாதையெல்லாம் போச்சு என்று பதறுவார். அந்த நேரம் மகன் வந்து வாசலில் நிற்பான். ‘‘வீட்டுக்குள்ள நுழையாதே… அப்படியே போய்விடு. உள்ளே வந்தா வெட்டுவேன்” என்பார் தந்தை.
’ஏன் இவ்வளவு கோபம்!’ என்று புரியாமல் மகன் கேட்பான். இவர் தாம் கேட்ட தகவலைச் சொல்லுவார். நான் குடிக்கல உங்க நண்பர் குடிச்சிட்டுப் பை நிறைய பணத்துடன் விழுந்து கிடந்தார். அதைப் பார்த்த நான் அவரை வீட்டிற்கு அழைத்துச்சென்றேன்.
அவர் போதையில் ஆடி அசைந்து சென்றபோது அவரைப் பிடித்திருந்த நானும் அப்படிச் செல்லவேண்டியதாகி விட்டது. ‘‘குடிகாரனைத் தEொட்டதற்கே இப்படி கெட்ட பெயர் வந்துடுச்சே! குடியைத் தEொட்டா எவ்வளவு கெட்ட பெயர் வந்து சேரும்’’ என்று மகன் கூறுவான். தன் தவற்றை உணர்ந்த தந்தை, மகனைக் கட்டி அணைத்துக்கொள்வார்.