📖 generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 229definition

தEொலைக்காட்சி நேர்காணல்

Chapter 69: படிப்போம் பயன்படுத்துவPோம் · ADVANCED TAMIL

தEொலைக்காட்சி நேர்காணல் ‘‘நேர்காணல் என்பது வினா கேட்பவர், விடை தருபவர், நேயர்கள் என மூவரை மையப்படுத்திய நிகழ்ச்சியாகும். நேர்காணல் நிகழ்த்துபவர், தாம் வெற்றிபெறவே ண்டும் என்ற நோக்கில் வினாக்களைக் கேட்கக் கூடாது. நேயர்களின் நிலையில் இருந்து வினாக்களைக் கேட்க வேண்டும். நேர்காணல் தருபவர் நேயர்களைக் கருத்தில் கொண்டு தெளிவான விளக்கத்தினை விடையாகத் தருதல் வேண்டும்.

இப்படிப்பட்ட நேர்காணலே உண்மை நிலையை வெளிப்படுத்துவதாக அமையும். இத்தகைய நேர்காணலானது பல்வேறு சூழல்களில் நிகழ்கிறது. பேட்டி எடுப்பவர் தற்செயலாய் தலைவர் ஒருவரை சந்திக்க நேர்ந்தால் அவரிடம் ஓரிரு மணித்துளி மட்டும் நிகழ்த்தப்படும் நேர்காணல் ஒருவகை. இது விமான நிலையங்களிலும் வழிப்பயணங்களின் போதும் நடைபெறும்.

அண்மைச் செய்திகள் குறித்து மக்களுக்கு அறிமுகமான ஆளுமை ஒருவரிடம் கருத்துக் கேட்பதாக அமைவது மற்றொரு வகை நேர்காணல். இது ஐந்து நிமிடத்திற்குள் முடிந்துவிடும். குறிப்பிட்ட ஒரு துறை சார்ந்த வல்லுநர்களிடம் திட்டமிட்டு நடத்தப்படும் நேர்காணல் நெடுநேர நேர்காணலாக நடைபெறும். சமுதாயத்தில் நடைபெறும் சீர்கேடுகளை மையப்படுத்தி ஒன்றுக்கும் மேற்பட்டவர்களிடம் விவாத நிகழ்ச்சியாக நடைபெறும் நேர்காணலும் உண்டு.

இவ்வகை நேர்காணலை நடத்துபவர் ’நெறியாளர்’ என்று அழைக்கப்படுவார். இந்நேர்காணல்கள் பெரும்பாலும் செய்தித் தொலைக்காட்சிகளில் நடத்தப்படுகின்றன’’ என நேர்காணலைப் பற்றி இயக்குநர் விளக்கமாக எடுத்துக்கூறினார். வானொலி, தொலைக்காட்சி நிலையங்களின் அமைப்பு மற்றும் நிகழ்ச்சி ஒளிபரப்புபற்றி அறிந்துகொண்ட மனநிறைவோடு நிலைய இயக்குநர் மற்றும் நிலையத்தில் பணிபுரியும் பணியாளர்கள் அனைவருக்கும் எங்களின் நன்றியினைத் தெரிவித்துக் கொண்டு வீடு திரும்பினோம். அன்றைய நாள் எங்களுக்கு மிகவும் மகிழ்வான நாளாக அமைந்தது.

அறிவைத் தேடிப் பயணிக்கும் ஒவ்வொரு நாளும் மகிழ்வானதுதான். பகிர்வின் மகிழ்வில் அன்பு மகள் பாரதி 12th Std - Advance Tamil - Chaper - - :

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →