📖 generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 230question

(உரையாடல்)

Chapter 69: படிப்போம் பயன்படுத்துவPோம் · ADVANCED TAMIL

(உரையாடல்) (பங்கேற்பாளர்கள்: சலீம், கலைமதி, கயல்விழி, ஆசிரியர்) (வயல்வெளியின் வரப்புப் பாதையொன்றில், கலைமதி தலையணி ஒலிவாங்கியில் பாட்டுகேட்டவாறு நடந்துசெல்கிறாள். எதிரே அவளது பள்ளித் தEோழன் சலீம் வருகிறான்) சலீம்: என்ன கலை, தலையணி ஒலிவாங்கியில் (Head Phone) பாட்டுக் கேட்டுக்கொண்டே எங்கே செல்கிறாய்? கலைமதி: (காதிலிருந்து ஒலிவாங்கியை எடுத்துவிட்டு) சொல்லு சலீம். நல்லா இருக்கியா?

விடுமுறை என்பதால் வயலைச் சுற்றிப் பார்க்கலாம் என்று செல்கிறேன். நீயும் வருகிறாயா? சலீம்: வருகிறேன் கலை. எங்கப்பாவும் வயலில்தான் இருக்கிறார்.

அவருக்குச் சாப்பாடு கொண்டுசெல்ல வேண்டும். வா! சேர்ந்தே செல்வோம். கலைமதி: (மீண்டும் ஒலிவாங்கியைக் காதில் பொருத்திக் கொண்டு) அப்பப்பா… எத்தனை பண்பலை… எத்தனை நிகழ்ச்சிகள்… கேட்டுக்கொண்டே இருக்கலாம்போல இருக்கு சலீம்.

சலீம்: ஆமாம்… ஆமாம்… திரையிசை மட்டுமின்றி நாட்டு நடப்புகள், கல்வி, வணிகம், மருத்துவம், சமையல், அரசியல், விளையாட்டு, வானிலை என எத்தனை எத்தனை நிகழ்ச்சிகள்! (எதிரே அவர்களின் வகுப்புத் தோழி கயல்வழி வருகிறாள்) கயல்விழி: என்ன கலை! சலீம்! நான் வந்ததுகூடத் தெரியாமல் அப்படி எதைப் பற்றிப் பேசிக்கிட்டிருக்கீங்க?

கலைமதி: வா கயல் ! நாங்கள் வானொலி நிகழ்ச்சிகளைப் பற்றிப் பேசிக்கிட்டிருந்தோம். கயல்விழி: நீங்க ஏதாவது நிகழ்ச்சி தயாரித்து வானொலியில் ஒலிபரப்பப்போறீங்களா என்ன? சலீம்: நாம் தயாரித்துக் கொடுக்கும் நிகழ்ச்சிகளைக்கூட ஒலிபரப்புவாங்களா?

காட்சி - 12th Std - Advance Tamil - Chaper - - :

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →