📖 generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 134poem

தழுவல் நாடகங்கள்

Chapter 69: படிப்போம் பயன்படுத்துவPோம் · ADVANCED TAMIL

தழுவல் நாடகங்கள் நாடகக் குழுக்கள் தEோன்றிய அளவிற்கு நவீன நாடக எழுத்தாளர்கள் தமிழில் இல்லை எனலாம். இந்திரா பார்த்தசாரதி, ந.முத்துசாமி, ஞான. ராஜசேகரன், ஜெயந்தன், ஞாநி போன்றோ ர் எழுதிய சில நாடகங்களே முதலில் இருந்தன. எண்பதுகளிலும் தEொண்ணூறுகளிலும் தழுவல் நாடகங்களும் மொழிபெயர்ப்பு நாடகங்களும் ஏராளமாகப் பெருகின. பிற மொழிப் படை ப்பாளிகளான பாதல் சர்க்காரின் ஏவம் இந்திரஜித், விஜய் டெண்டுல்கரின் கமலா, கிரிஷ் கர்னாட்டின் துக்ளக், பெர்டோல்ட் பிரெகட்டின் வெள்ளை வட்டம் போன ற நாடகங்கள் தமிழில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. மு. ராமசாமி மேடையேற்றிய ‘துர்க்கிர அவலம்‘, சே. இராமானுஜத்தின் ‘கறுப்புத் தெய்வத்தைத் தேடி‘ போன றவை தழுவல் நாடகங்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தன. தமிழ் நாடகங்களைவிடவும் மொழியாக்கம் செய்யப்பட்ட நாடகங்களே பெரும்பாலும் மேடையேறின. இதன்பின் நேரடி தமிழ் நவீன நாடகத்திற்கான முயற்சிகள் நாடக ஆசிரியர்களால் மேற்கொள்ளப்பட்டன. இதனால் தமிழில் நவீன நாடகங்கள் மிகுதியாகத் தEோன்றலாயின. தங்களின் படைப்புகளின் மூலம் நவீன நாடக ஆளுமைகள் இக்காலகட்டத்தில் அடையாளம் காணப்பட்டனர்.

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →