📖 generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 56grammar_exercise

தமிழ்ப் புதினங்களின் தோற்றம்

Chapter 69: படிப்போம் பயன்படுத்துவPோம் · ADVANCED TAMIL

தமிழ்ப் புதினங்களின் தோற்றம் தமிழின் முதல் புதினமான பிரதாப முதலியார் சரித்திரத்தை ( ) மாயூரம் வேதநாயகர் எழுதினார். இப்புதினம் ஒரு பொதுவான கதைசொல்லும் பாங்கில் சுவையான நிகழ்வுகளைக் கோத்து எழுதப்பட்டது. அதன்பின் ராஜமய்யரால் எழுதப்பட்ட கமலாம்பாள் சரித்திரமும் ( ) அ.மாதவையாவால் எழுதப்பட்ட பத்மாவதி சரித்திரமும் ( ) தமிழின் தEொடக்ககாலப் புதினங்களாக அறியப்படுகின்றன. அ.

மாதவையா எழுதிய முத்து மீனாட்சி என்னும் புதினம் சமூக சீர்திருத்தப் புதினங்களுக்குத் தEொடக்கப் புள்ளியாக அமைந்தது எனலாம். வடுவூர் துரைசாமி, ஆரணி குப்புசாமி, ஜே.ஆர்.ரங்கராஜு முதலியோரின் புதினங்கள் அக்கால வாசகர்களால் விரும்பிப் படிக்கப்பட்டன. வை.மு.கோதைநாயகி அம்மாள் பெண்களுக்கான புதினங்களை எழுதினார். தமிழ்ப் புதின இலக்கிய வளர்ச்சியில் பெரியதEொரு திருப்புமுனையை ஏற்படுத்தியவர் கல்கி.

அன்று நிகழ்ந்து வந்த இந்திய தேசிய எழுச்சி, தமிழ்க் கலாச்சார மறுமலர்ச்சி, சமூக சீர்திருத்த நோக்கு ஆகியவற்றைத் தம் படைப்புகளில் இணைத்துக் கொண்டார். நாட்டு விடுதலை உணர்வை மையமாகக் கொண்ட தியாகபூமி, அலை ஓசை, கள்வனின் காதலி, மகுடபதி, பொய்மான் கரடு ஆகியன கல்கியின் சமூகப் புதினங்களில் குறிப்பிடத்தக்கவை.

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →