தமிழ்நாடு இயலிசை நாடக மன்றம் ‘தமிழ்நாடு இயலிசை நாடக மன்றம்‘ மத்திய சங்கீத நாடக அகாதெமியின் நோக்கங்களை மாநில அளவில் நிறைவேற்றுவதற்காக மாநில அரசால் உருவாக்கப்பட்ட அமைப்பு. இது தன்னாட்சி பெற்ற ஒரு கலை நிறுவனம். இம்மன்றம் தEொன்மை வாய்ந்த தமிழகக் கலைகளைப் போற்றிப் பாதுகாத்து மேம்படுத்தி வருகிறது. இந்திய மாநிலங்களுக்கு இடையே பண்பாட் டுப் பரிவர்த்தனைத் திட்டத்தின்படி பிற மாநிலங்களுக்குக் கலைக்குழுக்களை அனுப்பியும் பிற மாநிலக் கலைக்குழுக்களை வரவேற்றும் நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறது. நலிந்த கலைஞர்களுக்கு மாதந்தோறும் நிதியுதவி வழங்குதல், மறைந்த கலைஞர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்குதல், இளங்கலைஞர்களை ஊக்குவித்தல், சாதனையாளர்களுக்குக் கலைமாமணி விருது வழங்குதல், நாடகக்குழுக்களுக்கு மானியம் வழங்குதல் முதலான பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
📖 generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 138poem
தமிழ்நாடு இயலிசை நாடக மன்றம்
Chapter 69: படிப்போம் பயன்படுத்துவPோம் · ADVANCED TAMIL
Related topics
Have a question about this topic?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →