திறனாய்வினால் விளையும் பயன்கள் • இலக்கியங்களைச் சுவைத்துப் பாராட்டவும் சிறந்த கருத்துகளைத் தேர்ந்து அறியவும் திறனாய்வு பயன்படுகிறது. • மூலநூல்களைக் கற்கவேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டுகிறது. • புதிய நூல் வெளியீடுகளை உணர்த்துவதுடன், சிறந்த நூலாசிரியர்களையும் அறிமுகப்படுத்துகிறது. • இலக்கியம் பல கோணங்களில் ஆய்வு செய்யப்படுவதால், நூலாசிரியனின் ஆளுமை புலப்படுகிறது. எனவே திறனாய்வாளன், நூலாசிரியனைப்போல வாழ்க்கை பற்றிய விளக்கத்தைத் தர முடிகிறது. • குறுகிய காலத்தில் சிறந்த நூல்கள் அனைத்தையும் படிப்பதற்குத் திறனாய்வு உதவுகிறது. தாய் மொழி இலக்கியங்களை மட்டுமன்றிப் பிறமொழி இலக்கியங்களையும் அறிந்துகொள்ள ஓரளவு துணை செய்கிறது. • இலக்கியத்தின் சுவையான பகுதிகளை அறிந்துகொள்ள உதவுகிறது. விளக்கம் பெறவே ண்டிய கருத்துகளையும் தெளிவாக்குகிறது. • சிறந்த இலக்கியங்களைத் தேர்ந்தெடுக்கச் செய்வதுடன், சிறப்பில்லாதனவற்றை இனங்காணவும் வழிகாட்டுகிறது.
📖 generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 205poem
திறனாய்வினால் விளையும் பயன்கள்
Chapter 69: படிப்போம் பயன்படுத்துவPோம் · ADVANCED TAMIL
Related topics
Have a question about this topic?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →