திறனாய்வு –சில வரையறைகள் விக்டர் யூகோ : “இலக்கியம் சிறந்தத அல்லது குறையுடையதா என்பதைக் காண்பதே திறனாய்வாகும்”. ஸ்பிங்கான் : “கலைஞன் எதைக் கூற முயல்கிறான்? அதில் எங்ஙனம் அவன் வெற்றி பெறுகிறான்? அவன் கூறுவது தகுதியுடையதுதானா?
இவ்வினாக்களுக்கு விடை காண்பது திறனாய்வாகும்“. மேத்யூ ஆர்னால்டு : “உலகில் சிறந்ததென்று உணர்ந்து சிந்திக்கப் பெறுவதைத் தன்னலமற்ற முறையில் அறிந்து பரப்புவதற்கு முயற்சி செய்வது திறனாய்வாகும்“. எலியட் : திறனாய்வென்பது, ஒரு பொதுமை முயற்சியாகத் திறனாய்வாளனைக் காட்டுவதாக இல்லாமல் கலைப்படைப்பைக் காட்டுவதாக, சமூகத்தின் கலைச்சுவையைச் சரியான நெறியில் உருவாக்கி வளர்ப்பதாக இருக்க வேண்டும்“. அ.
ச. ஞானசம்பந்தம் : “ திறனாய்வு என்று கூறினால், ‘முடிவு கூறல்‘ அதனுள் அடங்கியிருத்தல் கண்கூடு“. 12th Std - Advance Tamil - Chaper - - :