திறனாய்வு – விளக்கம் ‘திறனாய்வு‘என்னும் சொல், நன்கு அறிமுகமான சொல்தான். ஏதேனும் ஒரு பாடல் அல்லது கவிதை குறித்து நயம் பாராட்டியிருப்பீர்கள். துணைப்பாடக் கதைகளைப் பற்றி, உங்கள் கருத்துகளைக் கூறியிருப்பீர்கள். நீங்கள் செய்த இந்தச் செயல்பாடுகள் எல்லாம் திறனாய்வில்தான் அடங்கும்.
ஒரு திரைப்படம் பார்க்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அந்தப் படம் எப்படி இருந்தது என்று யாரேனும் உங்களிடம் கேட்டால் என்ன சொல்வீர்கள்? திரைப்படத்தின் கதையமைப்பு, நடிகர்களின் நடிப்பு, இசையின் தன்மை, பாடல்கள் போன ற பல செய்திகளை உங்களை அறியாமலேயே ஆராய்ந்து கூறுவீர்கள் அல்லவா? நீங்கள் செய்த ஆய்வுதான், திறனாய்வு.
இன்னும் எளிதாகக் கூறவே ண்டுமானால், உங்கள் நண்பரைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று யாரிடமாவது கேட்டுப் பாருங்களேன். உடனே அவர்களைப்பற்றி எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்து கூறிவிடுவார்கள். ஒரு பாடலைப் பற்றி இலக்கியநயம் பாராட்டுவதும் ஒரு நூலைப் பற்றி மதிப்புரை எழுதுவதும் திறனாய்வுகளே. இலக்கியப் பரப்பில் ‘திறனாய்வு‘ என்ற சொல்லும் நாளிதழ் போன ற ஊடகங்களில் ‘விமர்சனம்‘ என்ற (வடமொழி) சொல்லும் வழக்கிலுள்ளன.
திறனாய்வு என்பதைப்பற்றி அறிஞர்கள் என்ன கூறியிருக்கிறார்கள் என்று பார்க்கலாம்.