திராவிடமொழிக் குடும்பத்தில் தமிழ் திராவிடமொழிக் குடும்பத்தில், இருபத்து மூன்றிற்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன. அவற்றுள் ஒன்றாகிய தமிழ் மொழி, மற்ற திராவிட மொழிகளுக்கெல்லாம் தாயாக விளங்குகிறது. “வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்து…“ என்னும் தEொல்காப்பியச் சிறப்புப் பாயிரத்தில், பனம்பார னார் தமிழ் மொழி வழங்கும் நிலப்பரப்பு குறித்துக் கூறியுள்ளார். வடக்கில் வேங்கடமலை, தெற்கில் குமரியாறு ஆகியவற்றை எல்லையாகக் கொண்டு, தமிழ்மொழி பேசப்பட்டு வந்துள்ளதாக அறியமுடிகிறது.
இன்றைய காலக்கட்டத்தில், இந்தியாவில் மட்டுமன்றி இலங்கை, மியான்மர், மலேசியா, சிங்கப்பூர், இந்தோனே சியா முதலிய உலக நாடுகளிலும் தமிழ்மொழி பேசப்படுகின்றது. “திராவிட மொழிகள் மிகப்பழைமையான மொழிகள் என்பதும் மூவாயிரம் ஆண்டுகட்கு முன்னரே இந்திய நாட்டில் வழக்கிலிருந்து வந்துள்ளன என்பதும் மொழியியலார்களின் கொள்கை. இந்தோ – ஆரிய மொழியாகிய இன்றைய சமற்கிருதம், இந்நாட்டில் நுழைவதற்கு