அறிமுகம் திறனாய்வும் இலக்கியம்போல ஒரு கலை எனவும் வாசிக்கப்பட்ட பனுவல்களில் மறைந்திருக்கும் உண்மைகளைக் கண்டு பிடித்துச் சொல்லும் அறிவுத்துறை எனவும் இரண்டு கருத்துகள் உள்ளன. இலக்கியவளம் நிறைந்த எல்லா மொழிகளிலும் திறனாய்வும் குறிப்பிடத்தக்க பணியைச் செய்கிறது. இலக்கியத்தின் வளர்ச்சிக்கும் சிந்தனை வளர்ச்சிக்கும் திறனாய்வு பெரிதும் துணை செய்கின்றது. தமிழில் தEொல்காப்பியர் காலம் தEொடங்கி, இடைக்கால உரையாசிரியர்கள் வழியாகத் திறனாய்வுமுறை செயல்பட்டு வருகிறது.
இன்றைய காலகட்டத்தில், தனித் துறையாக உருவெடுத்துள்ள திறனாய்வு, மொழிக் கல்வியில் இன்றியமையாத இடத்தைப் பெறுகிறது. ஆகவே, மொழியின் இலக்கணத்தையும் இலக்கியத்தையும் கற்க விரும்பும் மாணவர்கள், திறனாய்வு பற்றியும் அறிந்துகொள்ள வேண்டும்.