📖 generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 150poem

எடுப்பு (Take)

Chapter 69: படிப்போம் பயன்படுத்துவPோம் · ADVANCED TAMIL

எடுப்பு (Take) காட்சித்துண்டு நாம் எதிர்பார்த்த து போலவே சரியாக அமையும்வரை எடுப்பு (Take) நிகழும். சரியான ஒரு காட்சித்துணிப்பு பல எடுப்புகள்வரை செல்லும். சரியான கோணத்தில் எடுக்கப்பட்ட காட்சித்துணிப்புதான் தேர்ந்த ஒரு காட்சியாக மாறுகிறது. ஒரு காட்சியைப் படம்பிடிக்கும்போது ஒரே முறையில் அது சரியாக அமைந்து விடாது. நடிகர் சரியாக நடித்திருக்க மாட்டார். இருவர் தEோன்றும் காட்சியில் ஒருவர் சரியாகச் செய்ய மற்றவர் நடிப்பு சரியாக இருந்திருக்காது. நடிகரின் பார்வைக் கோணம் தவறாகப் போய்விடலாம். நடிப்பிடத்தில் சம்பந்தமில்லாதவர் வந்துவிடலாம். படப்பிடிப்பாளர் தவறு செய்துவிட்டாலும் அந்தக் குறிப்பிட்ட துணிப்பைத் திரும்பவும் எடுக்க வேண்டி நேரும். அதுதான் எடுப்பு.

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →